Sep 05, 2010 at 10:24 AM
adheedhan@gmail.com
முதல் பக்கம் arrow Blog
Blog - Content Section Layout
குடிசைகள் இல்லாத தமிழ்நாடு

நண்பர்களே
குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என நான் முன்னெடுத்துவந்த பிரச்சாரத்தை நீங்கள் அறிவீர்கள். எனது முயற்சி வீண்போகவில்லை தமிழக அரசு தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் உள்ள இருபத்தொரு லட்சம் குடிசைகளையும் எதிர்வரும் ஆறு ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக கட்டிக் கொடுக்கும் மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டில்

Read more...
எவர் முன்பும் நான் அழுதது இல்லை !

'ரவி, நான் அங்கு வருகிறேன் ஒன்றும் பிரச்னை இல்லையே?' என்று பிரபல ஆங்கில எழுத்தாளர் அருந்ததி ராயின் குறுஞ்செய்தி வந்தபோது, அவரை வர வேண்டாம் என்றுசொல் வதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தன. அடுத்ததாக, உருவாகி இருந்த புயல் சின்னம். மழை கொட்டிக்கொண்டு இருந்தது. எனது தொகுதியில் வீராணம் ஏரி நிரம்பி உபரி நீரைத் திறந்துவிட்டதில், பல கிராமங்களில் வெள்ளம். இவை எல்லாவற்றையும் மீறி, 'ஒரு பிரச்னையும் இல்லை. உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறேன்' எனப் பதில் அனுப்பினேன். புயல் பலவீனமாகிவிடும், மழை நின்றுவிடும், வெள்ளம் வடிந்துவிடும். எல்லாமே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என ஏனோ என் உள்மனம் சொன்னது.

Read more...
சுதாரித்த மெக்சிகோ... உஷாராகுமா தமிழகம்?

கடந்த ஏப்ரல் மாதத்தில் பன்றிக் காய்ச்சல் மெக்சிகோவை தாக்கியபோது, அந்த அரசாங்கம் செய்வதறியாது நிலைகுலைந்துபோனது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் குவிந்தனர். இதை சமாளிப்பதற்கு உடனடியாக ஆலோசனையில் இறங்கிய மெக்சிகோ அரசாங்கம், கடந்த ஏப்ரல் 26-ம் தேதி மெக்சிகோவில் 'ஹெல்த் எமர்ஜென்சி'யை அறிவித்தது. அரசுத் துறை, தனியார் துறை சார்ந்த அனைத்துவிதமான நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டன. உணவு, மருத்துவம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் அனாவசியமாக வெளியே செல்ல வேண்டாம் என்றும், வீட்டிலேயே இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது. மக்களும் அதை மதித்து நடந்துகொண்டார்கள்!

Read more...
வைரஸ் கூட்டணி அபாயம்...

'பயப்பட வேண்டாம், பயப்பட வேண்டாம்'என்று நாம் எவ்வளவுதான் சொல்லிக் கொண்டிருந்தாலும், பன்றிக் காய்ச்சல் பீதி மக்களிடையே பரவிக்கொண் டுதான் இருக்கிறது. இந்த நோயால் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் சாவு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போக, அதனால் பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழகமும் அந்தக் கவலை வரிசையில் வருகிறது. இது இந்தியாவுக்கு மட்டுமேயான பிரச்னை அல்ல. உலகின் 168 நாடுகள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டு லட்சம் பேருக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்திலும், அர்ஜென்டினாவிலும் பன்றிக் காய்ச்சலின் இரண்டாவது அலை, இப்போது மக்களைத் தாக்கத் தொடங்கியிருக்கிறது. எதிர்வரும் குளிர்காலத்தில் இங்கிலாந்தில் இந்நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அங்கு கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒன்பது பேர் இறந்துள்ளனர். இதுவரை முப்பத்தாறு பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Read more...
பன்றிக் காய்ச்சல் உயிர்க்கொல்லி நோயல்ல...
நாம் பயந்தது நடந்தே விட்டது. பன்றிக் காய்ச் சல் நோய், தமிழகத்தில் முதல் உயிரை பலி கொண்டிருக்கிறது. இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பலியாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல்கட்ட மரணங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் நேர்ந்தன. அம்மாநிலத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த நோய், இப்போது தமிழகத்திலும் மற்ற சில மாநிலங்களிலும் தன் நச்சுக் கரங்களை நீட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலுக்கு முதன்முதலாக பள்ளிச் சிறுவன் சஞ்சய் பலியாகி இருக்கிறான்!
Read more...
<< Start < Previous 1 2 3 4 5 Next > End >>

Results 1 - 10 of 48