Sep 05, 2010 at 10:35 AM
adheedhan@gmail.com
முதல் பக்கம் arrow Blog
Blog - Content Section Layout
துணை நிதிநிலை அறிக்கை
மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. து. ரவிக்குமார்.

திரு. து. ரவிக்குமார்: பேரவைத் தலைவர் அவர்களே, இன்றைக்கு துணை நிதிநிலை அறிக்கை உட்பட, சட்டமன்றத்தின் முன்னாலே பல்வேறு அறிக்கைகளும், ஆணையத்தினுடைய அறிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நீதியரசர் ப. சண்முகம் அவர்களுடைய விசாரணை ஆணையத்தினுடைய அறிக்கையும் இங்கே வைக்கப்பட்டுள்ளன. 

Read more...
இலங்கை போர் நிறுத்தம்
மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. து.ரவிக்குமார்.

திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இலங்கை அதிபர் ராஜபக்சே அவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கின்ற நேரத்திலே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் முன்மொழிந்து இந்த அவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியது.
Read more...
மின்வெட்டு குறித்த விவாதம்
திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய மின் பற்றாக்குறை நிலவரத்தை சமாளிப்பதற்காக, இடைக்காலத்திலே கொண்டு வரப்பட்ட அந்த மின் கட்டண உயர்வை, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் இரத்து செய்யவேண்டுமென்று கோரிக்கை விடுத்தபோது, அதை ஏற்றுக்கொண்டு, அந்தக் கட்டண உயர்வை இரத்து செய்த, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் முதலிலே என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Read more...
சட்ட' கல்லூரி மாணவர் பிரச்சனை
மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிக உறுப்பினர் திரு. து. ரவிக்குமார்.

திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அம்பேத்கர் சட்டக்கல்லூரியிலே நேற்றையதினம் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் பற்றி விரிவாக ஏற்கனவே உறுப்பினர்கள் அனைவரும் எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள். அந்தக் கல்லூரிக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெயரைச் சூட்டுவதற்காக நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் எத்தனை முயற்சிகளை எடுத்துக்கொண்டார், அதன்மூலம் ஒரு சமூக நீதியை எப்படி இந்த நாட்டிற்கு உணர்த்தினார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
Read more...
ஈழத் தமிழர் பிரச்சனை
திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்ததற்காக தமிழினத் தலைவர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையாய் விளங்குகின்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Read more...