|
இலவச பொறியியல் கல்வி: புதுச்சேரிக்கும் திண்டிவனத்துக்கும் இடையில் அமைந்துள்ள பால்ஸ் என்ஜினியரிங் கல்லூரி நிர்வாகம் அப்பகுதியைச் செர்ந்த இருபத்தைந்து தலித் மாணவர்களை எவ்வித கல்விக் கட்டணமும் இல்லாமல் சேர்த்துக்கொள்ள முன்வந்துள்ளது.
அக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று இந்தச் சலுகையை அக்கல்லூரி தருவதற்கு முன்வந்திருக்கிறது.வானூர் மற்றும் திண்டிவனம் தாலுக்காக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த 50 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 15 நாட்கள் இலவசப் பயிற்சி அளித்து தேர்வு நடத்தப்படும். அதன்பிறகு அவர்களில் 25 பேர் அக்கல்லூரியில் சேர்க்கப்படுவார்கள். 25 மாணவர்களில் 12பேர் பெண்களாக இருப்பார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
ரவிக்குமார் 54 முதல் தளம் சவரிராயலு தெரு புதுச்சேரி 605 001 மொபைல்: 94430 33305 |