Blog
Articles
எவர் முன்பும் நான் அழுதது இல்லை !
| எவர் முன்பும் நான் அழுதது இல்லை ! |
|
'ரவி, நான் அங்கு வருகிறேன் ஒன்றும் பிரச்னை இல்லையே?' என்று பிரபல ஆங்கில எழுத்தாளர் அருந்ததி ராயின் குறுஞ்செய்தி வந்தபோது, அவரை வர வேண்டாம் என்றுசொல் வதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தன. அடுத்ததாக, உருவாகி இருந்த புயல் சின்னம். மழை கொட்டிக்கொண்டு இருந்தது. எனது தொகுதியில் வீராணம் ஏரி நிரம்பி உபரி நீரைத் திறந்துவிட்டதில், பல கிராமங்களில் வெள்ளம். இவை எல்லாவற்றையும் மீறி, 'ஒரு பிரச்னையும் இல்லை. உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறேன்' எனப் பதில் அனுப்பினேன். புயல் பலவீனமாகிவிடும், மழை நின்றுவிடும், வெள்ளம் வடிந்துவிடும். எல்லாமே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என ஏனோ என் உள்மனம் சொன்னது. 17-ம் தேதி கொச்சியில் இருந்து விமானத்தில் வந்தவரை வரவேற்கப் போனபோது அருந்ததியைச் சந்தித்த முதல் தருணம் நினைவுக்கு வந்தது. அப்போது, 'நீங்கள் தமிழகக் கிராமங்களைச் சுற்றிப்பார்த்து, இங்குள்ள நிலைமை குறித்து எழுத வேண்டும்!' என்று கோரிக்கை வைத்திருந்தோம். அது ஈடேற இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. வருடக்கணக் கில் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு தருணத்தை மழை அடித்துச் செல்ல அனுமதிக்க முடியுமா என்ன?
கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக பாண்டிச்சேரியை வந்தடைந்தோம். மழையைக் குடித்துக் கிளர்ந்து நின்ற தாவரங் கள் எங்கு பார்த்தாலும் பசுமையைப் பூசியிருந்தன. சூரியன், குளிரை விரட்ட கணப்பு போட்டதுபோல் இதமாகக் காய்ந்து கொண்டு இருந்தது. நேரே எனது வீடு. என் மனைவிசெண்பகம் வைத்த மீன் குழம்பில் அருந்ததியும் சொக்கிப்போனார். குடிக்கக் கொஞ்சம் ரசம், கடித்துக்கொள்ள பச்சை மிளகாய். அன்று ஆரோவில்லுக்குப் போகலாம் என்று திட்டம். மழையின் காரணமாக அங்கு மாத்ரி மந்திரை மூடிவைத்திருந்தார்கள். எனவே, பாண்டிச்சேரியைக் காரில் இருந்தபடியே கொஞ்சம் சுற்றிப்பார்த்தோம். நர்மதா போராட்டத்தைப்பற்றியும் மாவோயிஸ்ட்டுகளின் நிலைமைபற்றியும் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவரிடம் அமெரிக்காவைப்பற்றி பேச்சு திரும்பியது. அங்கே இருப்பவர்கள் கற்பனை வறண்டுபோனவர்களாக இருப்பதைச் சொன்னார். அங்கிருந்து சொல்லும்படியாக ஓர் எழுத்தாளர்கூட வராதது ஏன் என்ற எனது கேள்விக்கு அப்போது பதில் கிடைத்தது. 'உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?' என்று கேட்டேன். அவரால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் யோசித்து, ஜான் பெர்ஜர் என்றார். பிரிட்டிஷ் எழுத்தாளரான பெர்ஜரும் அருந்ததி ராயைப் போலவே புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர். தனக்குக் கிடைத்த பரிசுப் பணத்தில் பாதியை அவர் பிளாக் பேந்தர் கட்சிக்குக் கொடுத்துவிட்டார். அருந்ததியும் அப்படித்தான் பொதுக் காரியங்களுக்காகப் பணத்தைச் செலவிட்டு வருகிறார். தனது புத்தகம் ஒன்றுக்காக ஐந்து லட்சம் பவுண்டுகளை அட்வான்ஸாகப் பெற்ற இந்திய எழுத்தாளர் அவர் மட்டுமாகத்தான் இருப்பார். அவர் நடித்த திரைப்படங்கள்பற்றியும், எழுதிய திரைக்கதைகள் குறித்தும் உரையாடினோம். அவர் நடித்த திரைப்படம் ஒன்றை நான் பார்த்திருக்கிறேன். கட்டடக் கலை பயிலும் மாணவியாக அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைவைத்து எழுதப்பட்ட கதை அது. அதில் அவரைப் பார்த்தால் 'காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்' நாவலில் வரும் குறிஞ்சிப்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமையும் அருந்ததி பார்த்தார். அங்கு அவர் சந்தித்த மனிதர்களைப்பற்றி, ''கள்ளங்கபடமற்ற முகங்களைப் பார்த்தேன்'' என்று சொன்னார். உங்களுக்கு அரசாங்கம் என்ன மாதிரியான வசதிகளைச் செய்து தருகிறது என்று கேட்டுக் குறித்துக்கொண்டார். இந்திய நாட்டுக் குடிமகன் அந்தஸ்து கிடைத்தால் மகிழ்ச்சியா என்று கேட்டார். அப்போது 'டைம்ஸ் நவ்' செய்தி நிறுவனத் திடம் இருந்து போன் வந்தது. இலங்கையில் நடந்த மனித உரிமைக் கொடுமைகள் குறித்து கருத்துகேட்டார் கள். பதிலளித்துவிட்டு வந்த அருந்ததி, ''இலங்கையில் நடந்த பயங்கரத்துக்கு எது காரணம்? பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று சொல்லிவிட்டு, எதையும் செய்யலாம் என்பதற்குக் காரணம் அதைச் சுற்றியுள்ள மௌனம்தான். 30-களில் நாஜிக்கள் செய்ததை இப் போது இலங்கையில் செய்கிறார்கள். இதை சர்வதேச மீடியா சரியாக இனம் காண வேண்டும்'' என்று சொன்னார். ஈழப் பிரச்னை ஏன் அப்படி கோரமாக முடிந்தது என்று அவர் எழுப்பிய வினாவுக்கு என்னிட மும் பதில் இருக்கவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் சில கிராமங்களைப் பார்ப் பதாக முடிவு செய்திருந்தோம். வாழ்வின் ஒவ்வொரு கூறும் எப்படி சாதிரீதியில் தனித் தனியே பிரிக்கப்பட்டு இருக்கிறது என்பதை நேரடியாகக் காண விரும்பினார். தனித் தனியே இருக்கும் தெருக்கள், கோயில்கள் என ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு வந்தவர், தண்ணீர்த் தொட்டிக்கு நீரேற்றும் பம்புசெட் கூட தனித்தனியே இருப்பதைப் பார்த்துத் திகைத்துவிட்டார். இடுகாடுகள் எப்படி இருக்கும் என்று கேட்டார். அதுவும் அப்படித் தான் என்று சொன்னபோது அதை நேரில் பார்க்க வேண்டும் என்றார். போய்ப் பார்த் தோம். காஷ்மீரில்கூட இப்படி இல்லை என வருத்தப்பட்டார்.
சிதம்பரம் போனோம். எனது தொகுதிக்கு உட் பட்ட நந்தனார் பள்ளிக்குச் சென்று மாணவர் விடுதி யைப் பார்த்தார். ஒவ்வொரு அறையாக வந்தவர், அந்த மாணவர்களின் பின்னணியை ஆர்வத்தோடு கேட் டார். விடுதிக்கு வெளியே படுத்திருந்த சின்ன நாய்க் குட்டி அவர் கண்ணில் பட்டுவிட்டது. அதோடு ஒரு சிறுமியைப்போலக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். அருந்ததியின் வருடலில் தூக்கம் கலைந்து நெட்டி முறித்துக்கொண்டு உற்சாகம் பெற்று விளையாட ஆரம்பித்துவிட்டது அந்த நாய்க் குட்டி. நடராஜர் கோயிலுக்குப் போனோம். அதன் வரலாற்றையும் நந்தன் கதையையும் சொல்லிக் கொண்டே போனேன். அன்று வெள்ளிக்கிழமை என்பதால், கோயிலில் கூட்டம் நெரிந்தது. ஐயப்ப பக்தர்களின் கூட்டம்தான் அதிகம். காட்சிகள் யாவும் அவரது கண்களுக்குள் படச்சுருள்களாகப் பத்திரமாகி வருவதை உணர முடிந்தது. மறுநாள் சோழபுரம் போனோம். அது கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் ஓர் ஊர். தேன்மொழியின் நெற்குஞ்சம் என்ற சிறுகதைத் தொகுப்பை அங்கு அருந்ததி வெளியிட்டார். அந்த எளிய நிகழ்ச்சியில் அரசன் பாராமெடிக்கல் கல்லூரியின் மாணவிகளும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களும்தான் பார்வையாளர்கள். அந்த மாணவிகளுக்கு ஒரே வியப்பு. எத்தனை பெரிய எழுத்தாளர் இவ்வளவு எளிமையாக இருப்பாரா என்ற ஆச்சர்யம். அவர்களிடம் நீண்டநேரம் உரையாடினார் அருந்ததி. கீழவெண்மணியை நோக்கிப் பயணப்பட்டோம். வழி நெடுகிலும் இலக்கியம்பற்றிய உரையாடல். அவருடைய அம்மாவைப்பற்றியும் அவர் நடத்திவரும் பள்ளிக்கூடத்தைப்பற்றியும் நிறையச் செய்திகள். எப்போதும் போராளியாக இருப்பதில் உள்ள ஜடத் தன்மையைப்பற்றிப் பேசிக்கொண்டோம். முற்போக்காளராக இருப்பது சோகமான விஷயமல்ல என்பதுபற்றி மிஷேல் ஃபூக்கோ சொன்ன வாசகத்தை நான் படித்துக்காட்டினேன்.
வெண்மணியில் வாழைப்பூ வடிவில் நிறுவப்பட்டு இருக்கும் நினைவுச் சின்னம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. வெளியூரில் இருந்து பார்க்க வருபவர்களுக்கு அந்தச் சம்பவத்தைப்பற்றிச் சொல்வதற்கு என்றே ஒரு தோழர் அங்கே இருக்கிறார். அவரை அழைத்து வந்தார்கள். ஒரு சுற்றுலா வழிகாட்டியின் துல்லியத்தோடு அவர் எங்களிடம் அந்தச் சம்பவத்தை விவரித்தார். இடையிடையே உணர்ச்சிவசப்பட்டு என் கைகளை இறுக்கவும் தவறவில்லை. அருந்ததிக்குச் சில விஷயங் களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றிருந்தது. வெண்மணியில் தீ வைத்தவர்கள் அல்லது அவர்களோடு வந்தவர்கள், மேலவளவில் கொலை செய்ததாகக் கூறப்படுபவர்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்றார். அடுத்த முறை நிச்சயம் சந்திக்கலாம் எனச் சொன்னேன். நான் பாப்லோ நெரூடாவின் சுயசரிதைபற்றிப் பேசினேன். பர்மியப் பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதையும், அவரது பேய்த்தனமான அன்பில் இருந்து தப்பித்து ஓடியதையும் நெரூடா அதில் விவரித்திருப்பார். அதை நான் சொன்னபோது, தனது நாவலின் கற்பனையையும் மிஞ்சுகிற ஒரு செய்தியை அருந்ததி சொன்னார். அவருக்குத் தெரிந்த பெண் ஒருவர் இருக்கிறார். அவரது பெயர் ஜெர்னா. அவர் அருந்ததியைப்போலவே உடுத்திக்கொள்வார். அவரைப்போலவே பேச்சு. தோற்றமும்கூட அவரைப் போலத்தான். அருந்ததியின் நாவலில் வரும் வரிகள் ஜெர்னாவுக்கு மனப்பாடம். எல்லோரிடமும் அந்த சொற்களைக்கொண்டுதான் உரையாடுவார். பல இடங்களில் தன்னை அருந்ததி என்றே சொல்லிக்கொள்ளவும் ஆரம்பித்துவிட்டாராம். முதலில் அதை சுவாரஸ்யமாகக் கவனித்துக்கொண்டு இருந்த அருந்ததிக்கு இப்போதோ அது தாங்க முடியாத துன்பமாக மாறிவிட்டது. தனது அடையாளத்தையே ஒருவர் களவாடுவது என்றால், அதை எப்படி எதிர்கொள்வது? நான் தயங்கியபடி கேட்டேன். 'நீங்கள் அருந்ததியா... ஜெர்னாவா?' சிரிப்பில் அவருக்குப் புரையேறிவிட்டது. புகழில் இருந்து விலகி இருப்பதுபோலக் கடின மானது எதுவும் இல்லை. அருந்ததி ராய் அதைத் தனது இயல்பாகக்கொண்டு இருக்கிறார். நமது சுதந்திரத்தை இழந்துவிடக் கூடாது என்பதுபற்றி அவர் சொன்ன விஷயங்கள் எனக்கு ஒரு ஞானி சொன்ன வார்த்தைகளைப்போல் இருந்தன. மற்றவர் களைச் சுதந்திரமாக இருக்கவிடுவது எவ்வளவு முக்கியமானது என்பதை நான் புரிந்துகொண்ட கணம் அது. அருந்ததி பேசுவதைக் கேட்கும்போது அவரது நாவலைப் படிப்பதுபோல இருந்தது. ஒவ்வொரு வார்த்தையும் கற்பனை வளத்தோடு வந்து விழுந்தது. வெண்மணிக்குப் போகும் வழியில் அவரிடம் 'நீங்கள் அழுதிருக்கிறீர்களா?' என்று கேட்டேன். 'ஆமாம்! அழுது இருக்கிறேன். ஆனால், எவர் முன்பும் நான் அழுதது இல்லை. அது தனிமையில் செய்ய வேண்டிய விஷயம்!' என்றார். சென்னை விமான நிலையத்தில் 'மீண்டும் வருகிறேன்' என்றபடி அவர் விடைபெற்றபோது, எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டு நின்றேன். எந்த அடையாளத்திலும் தேங்கிவிடாத அவரது பண்பு முக்கியமானது. அடுத்து, ஒரிஸ்ஸா அல்லது சட்டீஸ்கர் அல்லது காஷ்மீர் என அவருக்காகக் களங்கள் காத்திருக்கின்றன. அவருடைய வாழ்வில் நேரத்துக்கு இருக்கும் மதிப்பு என்ன என்பதை நான் அறிவேன். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக வந்தவர், இதோ என் நண்பராகத் திரும்பிப் போகிறார். இந்த மாற்றத்தை உணரச் செய்வது சாதாரண விஷயம் அல்ல. அவர் மொழியிலேயே சொல்வதானால், 'அன்பை விவரிப்பதுபோலச் சோகமானது எதுவும் இல்லை!' நன்றி அருந்ததி! |
||

இருந்தன. ''மாவோயிஸ்ட்டுகளை அடக்குகிறோம் என்ற போர்வையில், அப்பாவி ஆதிவாசி மக்கள் மீது வன்முறை பாய்ச்சப்படுகிறது. ஆதிவாசிகள் குடியிருக்கும் பகுதிகளில் சுதந்திர இந்தியாவின் எந்தவித உள்கட்டமைப்பு வளர்ச்சியும் செய்யப்படவில்லை. அதற்காக வெட்கப்படாத அரசாங்கம் அவர்கள் போராடுவதற்காகக் கோபப்படலாமா? பன்னாட்டு நிறுவனங்கள் அந்தப் பகுதியில் உள்ள இயற்கை வளங்களை மொத்தமாகச் சுரண்டத் தயாராகிவிட்டன. அவர்களுக்கு நம்முடைய நாடு தாரைவார்க்கப்படுகிறது. அதை ரகசியமாகச் செய்துமுடிக்க மாவோயிஸ்ட்டுகளைக் காரணமாகக் காட்டுகிறார்கள்'' என்று சொன்னார்.
ரஹேலைப் போலவே இருக்கும். ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்து, அலட்சியமாக முடியப்பட்ட கேசத்தோடு மூக்கின் ஒரு பக்கம் ஒரு சிறு துளி வைரம் மினுங்க, சுதந்திரம் என்பதற்கு இல்லஸ்ட்ரேஷனாக பென்சிலால் வரைந்த சித்திரம்போல இருப்பார். இப்போது அவருக்கு உடையைப்பற்றியோ, அழகைப்பற்றியோ எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. வயதா அல்லது அவர் ஈடுபட்டிருக்கும் அரசியலா... எது அவரை இப்படி ஆக்கியது என்று புரியவில்லை!
வடலூரில் இருக்கும் நரிக்குறவர் பள்ளி யைப் பார்ப்பதற்காகச் சென்றோம். அங்குஇருந்த பெண்களையும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் பார்த்துவிட்டு, ''இவர்களுடைய டிரெஸ்ஸிங் சென்ஸ் என்னுடையதைப் போலவே இருக்கிறது பாருங்களேன்'' என வியந்து, தனது உடைகளைப் பெருமையோடு பார்த்துக்கொண்டார். நரிக்குறவர் பிள்ளைகளோடு இருந்த நேரம் முழுவதும் அவரது முகம் சந்தோஷத்தில் பூரித்திருந்தது. அந்தக் குழந்தைகளில் ஒன்றின் விரல்களைப் பிடித்துக் கொண்டு வாஞ்சையோடு வருடியபடி இருந்தார். அவர்கள் தமது அன்பைக் காட்ட மணிமாலை ஒன்றைப் பரிசளித்தார்கள். அது நிரந்தரமாக அவரது கழுத்தில் இடம்பிடித்துக்கொண்டது.
Leave a Comment