|
 |
கட்டிலில் கிடக்கும் மரணம்
மருதம் வெளியீடு
உலகின் வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்கள் எழுதிய கதைகள் இவை. நாட்டின் மொழியின் எல்லைகளுக்கும் அப்பால் வேட்கையை, துயரத்தை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன இந்தக் கதைகள். தமிழுக்குச் சில புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதோடு கதை சொல்வதில் புதிய முறைகளையும் முன்வைக்கிறது இந்த தொகுப்பு.
|
|
|
 |
தொலைந்த திசைகள்
தலித் வெளியீடு
அகதிகளின் மறுவாழ்வுக்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்கிற ஐ.நா.வின் 1967 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்திலும் இந்தியா ஏனோ கையெழுத்திடவில்லை. அந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டால் உடன்படிக்கைகளைச் சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற அச்சத்தால் இன்று வரை அகதிகளின் மறுவாழ்வில் மெளனம் சாதிக்கிறோம். அந்தச் சட்டபூர்வ நிர்ப்பந்தம் இல்லாமல் போனதால்."எங்கிருந்தோ வருபவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன?" என்று சுயநலத்தோடு நடந்துகொள்ள வசதியாக இருக்கிறது.
|
|
|
 |
வெளிச்சமும் தண்ணீர் மாதிரி தான்
தலித் வெளியீடு
ஆப்ரிக்க, லத்தீன், அமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் வறுமையை, நோயை, போரை, ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் மனிதர்களை நம்முன் வரைந்துகாட்டுகின்றன. வன்முறையின் நுட்பங்களை விவரிப்பதன் மூலம் அதனைக் கடந்து செல்லும் ஆற்றலை இக்கதைகள் தருகின்றன. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகளை எழுதியவர்களில் காப்ரியேல் கார்சியோ மார்க்யெஸ் தவிர மற்ற அனைவரும் தமிழுக்குப் புதியவர்கள். |
|
|
 |
பணிய மறுக்கும் பண்பாடு
காலச்சுவடு பதிப்பகம்
சிக்கல்கள் நிறைந்ததாகிவிட்ட பொதுமக்கள் பரப்பிற்குள் நீதி மற்றும் சமத்துவத்துக்கான விட்டுக்கொடுக்காத போராட்டத்தை நடத்திய அரசியல் போராளியும் அறிவுஜீவியும் சிந்தனையாளருமான எட்வர்ட் ஸெய்த்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளையும் நேர்காணல்களையும் கொண்ட தொகுப்பு இது. ஸெய்த்தை, அவரது சிந்தனைகளை எளிமையும் தீவிரமும் கொண்ட விதத்தில் அறிமுகம் செய்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஸெய்த்தின் சிந்தனைகளைப் பிரதிநிதித்துவம் செய்கிற படைப்புகள் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றோடு அவரது மாணவரும் சக சிந்தனையாளருமான கௌரிவிஸ்வநாதன் எழுதியுள்ள அஞ்சலியும் இதில் இடம்பெற்றுள்ளது. |
|
|
 |
உரையாடல் தொடர்கிறது
விடியல் வெளியீடு
சக மனிதர்களை நோக்கிய பொறுப்பை தூங்கும் குழந்தையென தாங்கியிருக்கும் மனநிலையில், மன அமைப்பின் அடுக்குகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எழுத்து வேறொரு மொழியில் அமைந்து நிற்கும் எழுத்தை, அதன் பாதிப்பைத் தன் தாய்மொழியில் உணர்ந்து புரிந்துகொள்ளும் மனம். பாதிப்பைப் பகிர்ந்துகொள்ளும் பொறுப்புடன் வேட்கையுடன் துடிக்கும் மனநிலை, (__) இந்த வகையில் மனிதர்களுக்கிடையே நிகழக்கூடிய அடிப்படையான ஓர் நட்பாக மாறுகிறது மொழிபெயர்ப்பு. பொறுப்பையும் கடப்பாட்டையும், வேட்கையையும் தூண்டி நிற்கிறது இந்த நட்புறவு (__) பகிர்ந்து கொள்ளப்படாமல், படிக்கப்படாமல், போகப்பொருட்களாக தனியுடைமையாக ஆங்கிலப் புத்தகங்கள் பதுக்கப்படும் தற்கால தமிழ்ச் சூழலில் பல்வேறு சிரமங்களுக்கிடையில், பிரதிகளாக ஆங்கிலத்தில் கிடைத்தவற்றை எப்படியும் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற தவிப்புடன் எழுதப்பட்டிருக்கின்றன இந்த மொழிபெயர்ப்புகள். |
|
|
 |
கடக்க முடியாத நிழல்
காலச்சுவடு பதிப்பகம்
புனிதப்படுத்தப்பட்ட நம்பிக்கை கேள்விக்கும், விவாதத்துக்கும், விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதாகிறது. அதனைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதன் தனது பகுதியாக அதை ஆக்கிக்கொள்கிறான். சாதி-அப்படியான நம்பிக்கைகளுள் ஒன்று. நியாயமோ, தர்க்கமோ, ஆதாரங்களோ அற்ற அந்த புனித நம்பிககையை அதனால் நசுக்கப்படும் ஒருத்தர் அடித்து நொறுக்கியாக வேண்டும். மறுக்க முடியாத ஆதாரங்களை, புறக்கணிக்க முடியாத தர்க்கத்தோடு முன்வைப்பதன் மூலமே தனது நியாயத்தை அவர் உணர்த்த முடியும். அத்தகைய காரியத்தைத்தான் இக்கட்டுரைகள் செய்கின்றன. கல்வி, பொருளாதாரம், சட்டம், வெகுசனப்பண்பாடு எனப் பல்வேறு தளங்களையும் ஆராய்கிற இக்கட்டுரைகள், ஈழப்போராட்டத்தின் போக்கு, பெரியாரின் பங்களிப்பு முதலானவற்றைப் பற்றியும் கூர்மையான அவதானங்களைப் புதிய கோணங்களிலிருந்து முன்வைக்கின்றன. |
|
|
 |
கொதிப்பு உயர்ந்து வரும்
காலச்சுவடு பதிப்பகம்
நாம் பார்க்க மறுத்த காட்சிகள், கேட்காமல் விட்ட அலறல்கள், படிக்காமல் புரட்டிய செய்திகள், சிந்திக்க முன்வராத பிரச்சினைகள்- இவற்றை மீண்டும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றன இந்தக் கட்டுரைகள். இவற்றில் வேறொன்றுமில்லை கொலையுண்ட தலித்துகளின் இரத்தம், கொளுத்தப்பட்ட சேரிகளிலிருந்து கொஞ்சம் சாம்பல், மிதித்து தேய்க்கப்பட்டவர்களிலிருந்து அழுகை, தேம்பல், ஆத்திரம் கலந்து வரும் முறையீடு. அவ்வளவு தான். |
|
|
 |
கண்காணிப்பின் அரசியல்
விளிம்பு டிரஸ்ட்
உலகில் ஏராளமான சிந்தனைகள் இருக்கின்றன. இவை அறிவு ஜீவிகளின் கற்பனைகளை விடவும் அதிகம்; அரசியல்வாதிகள் எண்ணியிருப்பதை விடவும் உறுதியானவையாக, கலகக் கூறுகள் கொண்டவையாக வேட்கை மிகுந்தவையாக இருக்கின்றன இந்த சிந்தனைகள். இத்தகைய சிந்தனைகள் பிறக்கிற இடங்களில், இவை வெடித்து சக்தியோடு வெளிப்படுகிற தருணங்களில் நாம் இருக்க வேண்டும். சிந்தனைகளை மேலெடுத்துச் செல்லும் போராட்டங்களில் பங்கு பெற வேண்டும். சிந்தனைகள் உலகத்தை ஆட்சி செய்வதுல்லை தான். ஆனால் இந்த உலகம் சிந்தனைகளால் நிரம்பியிருப்பதால் தான், தொடர்ந்து சிந்தனைகளை இந்த உலகம் உற்பத்தி செய்து கொண்டிருப்பதால் தான் தாம் நினைக்கிறபடி இந்த உலகத் தலைவர்கள் ஆள முடியவில்லை. |
|
|
 |
இன்றும் நமதே
விகடன் பிரசுரம்
நாளொன்றுக்கு ஒரு டாலருக்கு கீழ் அதாவது சுமார் நாற்பத்தைந்து ரூபாய்க்கும் கீழ் வருமானம் உள்ளவர்களை வருமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களாக உலக வங்கி வரையறுத்துள்ளது. ஆனால் இந்திய அரசோ, நாளொன்றுக்கு பத்து ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களைத் தான் வருமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களெனக் கூறுகிறது. இது எந்த வித நியாயத்துக்குள்ளும் வரவில்லை. எனவே வருமைக் கோட்டை வரையறுப்பதற்கான சர்வதேச அணுகுமுறையை நமது மத்திய அரசும் பின்பற்ற வேண்டும். அரசாங்கங்களின் நலத்திட்டங்களின் பலன்கள் உரியவர்களுக்குப் போய்ச் சேர வேண்டுமெனில், குடிமக்களுக்கான அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அதில் ஒவ்வொருவருடைய சமூக, பொருளாதார, கல்வ தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யலாம். ஒரு அடையாள அட்டை தயாரிக்க பத்து ரூபாய் என வைத்தால் கூட இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க சுமார் 1100 கோடி தேவைப்படலாம். |
|
|
 |
சொன்னால் முடியும்
விகடன் பிரசுரம்
தன்முனைப்புடன் சமூகச் செயல்களைப் புரியும் ரவிக்குமார், தமிழ் நவீன இலக்கிய உலகில் ஒடுக்குமுறைக்கு ஆட்ப்பட்ட மனிதர்களின் வாழ்வை மட்டுமே கருப்பொருளாகக் கொண்டு எழுதி வருகின்றார். அரசு நிறைவேற்ற வேண்டிய கடமைகளைச் சுட்டிக்காட்டுவதோடு, அவற்றுக்கான செயல் திட்டங்களையும் முன்மொழிவதே எழுத்துச் சாதுர்யம். அப்படிப்பட்ட இவரது எழுத்து ஜூனியர் விகடன் இதழில் சிந்தனை பகுதியில் வெளிப்பட்டது. அதன் முதல் தொகுப்பு தான் இந்நூல். இலங்கைத் தமிழர்களை பாதுப்பிலிருந்து எவ்வாறு காப்பாற்ற வேண்டும்? தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்புக்கூறுகள் திட்டத்தை அரசு செயல் படுத்தாதது ஏன்? கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலையங்களினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் ஏன்? நாட்டில் ஊழலை ஒழிக்க என்ன செய்யலாம்? தீவிரவாதிகளின் கோரிக்கைகள் நியாயமானதா? அவற்றை நிறைவேற்றலாமா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை விவாதித்து அதற்கான தீர்வையும் முன்வைக்கிறார். |
|
|
 |
அம்பேத்கர்
பாரதி புத்தகாலயம்
1813 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கடைபிடித்து வந்த கல்விக் கொள்கையை அம்பேத்கர் விரிவாக அதில் ஆராய்ந்திருக்கிறார். கல்வி நிலையை அறிவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஹந்டர் கமிஷன் அறிக்கையில் தரப்பட்டிருந்த புள்ளிவிவரங்களையெல்லாம் எடுத்துக்காட்டி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக அரசு செய்யவேண்டியவற்றை அந்த மனுவில் அவர் விவரித்துள்ளார். சைமன் கமிஷன் முன்பு அம்பேத்கர் சமர்பித்த மனுவின் இறுதியில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள் சமச்சீர் கல்வி குறித்து விவாதங்கள் நடக்கும் இன்றையச் சூழலில் முக்கியத்துவம் பெறுகின்றன. |
|
Leave a Comment