கவிதைகள்

பாறையாய் இறுகும் மணல் -ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 18-Feb-2020

தண்ணீரின் ஞாபகங்களை மீன்கொத்திகளிடம் கேட்டுக்கொண்டிருந்த பொழுதில் நீ வந்தாய் மணலின் மறதி குறித்து ஆராய்வதாய் சொல்லிக்கொண்டாய் தாகம் என்றது மரம் விக்கலில் திணறிக்கொண்டிருந்தது வயல் புழுக்கம் தாளாமல் பெருமூச்செறிந்தது குளம் முன்பொரு காலத்தில் நதி இருந்தது என்றது மீன்கொத்தி நீராடிக் களித்தபொழுதுகளை நினைவுகூர முடியாமல் தடுமாறியது மணல் ஆம்பல் அலர்ந்திருந்த காலத்தை எண்ணி அழுதோம் கழ...

மௌனம்

பதிவு செய்த நாள் 18-Feb-2020

தரையில் மோதி சிதறுவதற்கு முன்பாக உடலோடு மிதக்கும் மௌனம் முடிவு அறிவிக்கப்படுவதற்காகக் காத்திருப்பவர்களின் உள்ளங்கைகளுக்குள் பொத்திவைக்கப்பட்ட மௌனம் உறையிட்ட பூச்செண்டுக்குள் கசகசக்கும் மலர்களின் மௌனம் பிரிந்து தன் வீடு ஏகும் மகளைத் தழுவி நிற்கும் தாயின் மௌனம் கைவிடப்பட்ட தனிமையில் இரவில் பயணிக்கும் நிலவின் மௌனம் இந்த வார்த்தைகளுக்குள் கனக்கும் ஒரு உயிரின் மௌனம்...

பதினொன்றாம் கவிதை

பதிவு செய்த நாள் 24-Jan-2020

கண்மாயில், மின்விசிறியிலிருந்து தொங்கும் கயிற்றில், ரயில் தண்டவாளங்களுக்கு இடையில், இப்போது - பட்டப்பகலில், நெரியும் ஜனத்திரளின்நடுவில் செய்தி மதிப்பும் இல்லா மரணங்கள் எண்ணிக்கையாகவும் மாறாத உயிர்கள் பெருக்கெடுத்த ரத்தம் ஆவியாகிறது, காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாய் நிலைகொள்கிறது, சுழன்று புயலாகிறது சிலர் அதற்குப் பெயரிடுகிறார்கள் வெண்மணி கயர்லாஞ்சி பரமக்குடி உணா எச்சரிக்கைக...

பத்தாம் கவிதை

பதிவு செய்த நாள் 24-Jan-2020

சொற்கள் சித்திரவதையில் ரத்தமாய்க் கசியும்போது சொற்கள் தோல்வியில் கண்ணீராய் உதிரும்போது சொற்கள் இயலாமையில் பெருமூச்சாய்க் கரையும்போது சொற்கள் அச்சத்தில் சிறுநீராய் ஒழுகும்போது எதைக்கொண்டு எழுதுவது ஒரு கவிதையை ? நீரின் பிரிவைச் சொல்லி மணல் புலம்பும் நதியல்லா நதியில் நுரைத்துப் பாய்கிறது வெறுப்பு மழை காணா நிலத்து முளையெனக் கருகுகிறது நம்பிக்கை யாருமற்றத் தனிமையில் ...