இடஒதுக்கீட்டுக்குஆபத்து - ரவிக்குமார்

Views : 385

பதிவு செய்த நாள் 18-Feb-2020


நீதித்துறைஎன்பதுநடுநிலையோடுதான்செயல்படும்என்றநம்பிக்கையைஅவ்வப்போதுஉச்சநீதிமன்றம்அசைத்துப்பார்த்துக்கொண்டேஇருக்கிறது.சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கும் சட்டங்களுக்கு தம்விருப்பத்துக்கேற்ப வியாக்கியானங்கள் தந்து அந்தசட்டங்களின் நோக்கத்துக்கு எதிராக அந்தசட்டங்களையே நிறுத்திவிடும் வல்லமைகொண்ட நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளனர். அவர்களின் திறமை நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அப்படியொரு அதிர்ச்சியைத்தான் இப்போது உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள்கொண்ட அமர்வு ஒன்று அளித்திருக்கிறது.

’இடஒதுக்கீடு என்பது அடிப்படைஉரிமை அல்ல’ என்றும் ,’ஒரு மாநிலஅரசு இடஒதுக்கீடு வழங்கமறுத்தால் அதைச்செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடமுடியாது’ என்றும் ஆபத்தான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றத்தின் அந்த அமர்வு 08.02.2020அன்று அளித்துள்ளது. உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் மீதான மேல்முறையீட்டு வழக்குஒன்றில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதிநாகேஸ்வரராவ் நீதிபதிஹேமந்த்குப்தா அடங்கியஅமர்வுதான் இப்படிசர்ச்சைக்குரிய தீர்ப்பைஅளித்துள்ளது.

உத்தராகண்ட் அரசு எடுத்தமுடிவு

உத்தரப்பிரதேசத்திலிருந்து பிரிந்து 2001 ஆம்ஆண்டுஉத்தரகாண்ட் மாநிலம் உருவெடுத்தபோது அதற்கான இடஒதுக்கீட்டுக்கொள்கையை அந்தஅரசு உருவாக்கியது. எஸ்சி பிரிவினருக்கு 19% எஸ்டிபிரிவினருக்கு 2% இடஒதுக்கீடுஅளிக்கப்பட்டது. பதவிஉயர்விலும் இந்தஇடஒதுக்கீடு பொருந்தும் எனஅந்தஅரசுஅறிவித்தது. அதை எதிர்த்து சிலர் வழக்குதொடர்ந்தனர். அந்தவழக்கில் தீர்ப்பளித்த உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றம்‘ உத்தரகாண்ட் அரசு பதவிஉயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதாஇல்லையா என்பதை முடிவுசெய்வதற்கு முன்புஎஸ்சிஎஸ்டிபிரிவினர் அரசுப்பணிகளில் போதியளவில் இடம்பெறவில்லை என்பதை உறுதிசெய்வதற்கான புள்ளிவிவரங்களை சேகரிக்கவேண்டும்’என்றுஆணையிட்டது. அதற்காக கமிட்டிஒன்று அமைக்கப்பட்டு புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டன. எஸ்சி எஸ்டி பிரிவினர் உரியஅளவில் அரசுப்பணிகளில் இல்லைஎன அந்தக்கமிட்டி தனதுஅறிக்கையில் கூறிவிட்டது. அதனடிப்படையில் இடஒதுக்கீடுவழங்குவதற்கு மாறாக எஸ்சி/ எஸ்டிபிரிவினருக்குப் பதவிஉயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது இல்லைஎன்ற முடிவை 2012 ஆம்ஆண்டு உத்தரகாண்ட் மாநிலஅரசுமேற்கொண்டது. அந்தமுடிவை ரத்துசெய்து 2019 ஆம்ஆண்டு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைஎதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான் இப்போது உச்சநீதிமன்றம் இந்தஉத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடமில்லையா?

‘அரசியலமைப்புச்சட்டப்பிரிவுகள் 16 (4) மற்றும் 16 (4 ஏ) ஆகியவைஅரசுவிரும்பினால் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு பணிநியமனம் பதவிஉயர்வு ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்கலாம். . அந்தப்பிரிவினர் உரியவகையில் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை என்பதைஅரசு ஊர்ஜிதம் செய்துகொண்டால் போதும். அப்படி ஊர்ஜிதம் செய்துகொள்வதற்கான விவரங்களை அரசுவைத்திருக்கவேண்டும். அரசின் முடிவுநீதிமன்ற சீராய்வுக்கு அப்பாற்பட்டதல்ல’ எனசரியாகவே கருத்துதெரிவித்துள்ள உச்சநீதிமன்ற அமர்வு அதன்பின்னர்தான் முரண்பாடான கருத்துகளைக் கூறியுள்ளது.

இப்போது வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்றத்தீர்ப்பில் இருக்கும் வெளிப்படையான முரண்பாடு என்னவென்றால் பதவிஉயர்வில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றுசொன்னால் அரசுப்பணிகளில்எஸ்சி/ எஸ்டிபிரிவினர் உரியஅளவில் இடம்பெறவில்லைஎன்று நிரூபிப்பதற்கானஆதாரங்களைஅரசு திரட்டிவைத்திருக்கவேண்டும். அதை எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றம் சீராய்வு செய்யலாம். அதற்கான அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு என்றுகூறியுள்ள உச்சநீதிமன்றம் ஒருமாநிலஅரசு இடஒதுக்கீடு வழங்கவில்லைஎன்று முடிவெடுத்தால் அதைநீதிமன்றம் கேள்விகேட்கமுடியாது என்றும் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி இடஒதுக்கீடு வழங்கவில்லைஎன்று முடிவெடுத்தால் அரசுப்பணிகளில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர்போதுமான அளவில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கிறார்கள் என்று நிரூபிப்பதற்கு எந்தஒருபுள்ளிவிவரத்தையும் அரசு சேகரிக்கவேண்டிய அவசியமில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

அதாவது“ இடஒதுக்கீடு வழங்குவதா இல்லையா என்பது அரசின்விருப்பம். இடஒதுக்கீடு வழங்குவது எனமுடிவெடுத்தால் அதைநீதிமன்றம் சீராய்வுசெய்யும். எனவே உரிய புள்ளிவிவரங்களை அரசு சேகரித்துவைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் இடஒதுக்கீடு வழங்குவதில்லை என்று அரசு முடிவுசெய்தால் அதை நீதிமன்றம் கேள்விகேட்கவும் முடியாது, இடஒதுக்கீடுகொடு என்றும் அரசிடம் சொல்லமுடியாது” என்பதே உச்சநீதிமன்ற அமர்வுஅளித்திருக்கும் தீர்ப்பு. நீதிமன்றத்தின் இடஒதுக்கீட்டுக்கு எதிரானநிலைபாடு எந்தஒளிவுமறைவுமின்றி இதில்தெளிவாக வெளிப்பட்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது.

பி.கே.பவித்ரா வழக்கு 

உச்சநீதிமன்றத்தின் இந்தநிலைப்பாடு பி.கே.பவித்ரா எதிர் இந்தியஅரசு என்றவழக்கில் உச்சநீதிமன்றம் அளித்ததீர்ப்பின் நோக்கத்துக்கு எதிரானதாக இருப்பதுமட்டுமின்றி வெளிப்படையாகவே நீதிக்குப் புறம்பாகவும் இருக்கிறது.பி.கே.பவித்ராவழக்கில் ( M A No. 1151 of 2018 InCivil Appeal No. 2368 of 2011 B K Pavitra and Ors Versus The Union of India and Ors ) கடந்த 10.05.2019 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்யு.யு.லலித் , ஒய்.சந்த்ரசூட் அடங்கிய அமர்வு அளித்ததீர்ப்பில் “ பதவிஉயர்வில் இடஒதுக்கீடு வழங்கவேண்டுமென்றால் எஸ்சி/ எஸ்டி பிரிவினர் சமூகத்தில் பின்தங்கி உள்ளனர் என்பதை நிரூபிக்கும் புள்ளி விவரங்களைத் திரட்டி முன்வைக்கவேண்டும் என நாகராஜ்வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியிருப்பது இந்திராசஹானிவழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு முரணாக உள்ளது எனவே அது செல்லாது “ எனக்கூறியது.

’சமூகத்தில்எஸ்சி/ எஸ்டிபிரிவினர் பின்னடைந்து இருப்பதை நிரூபிக்கும் புள்ளிவிவரம் எதையும் மாநிலஅரசுகள் திரட்டத் தேவையில்லை. எஸ்சி / எஸ்டி பட்டியலில் இடம்பெற்றாலே அதுசமூகத்தில் அவர்கள் பின்னடைந்து இருப்பதற்கு சான்றுதான்‘ எனஅந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நாகராஜ் வழக்கின் தீர்ப்பிற்குப்பிறகு, புள்ளிவிவரங்களைத் திரட்டவேண்டும் என்ற காரணத்தைக் காட்டிபல்வேறு மாநிலஅரசுகள்எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குப் பதவிஉயர்வில் இடஒதுக்கீடு அளிக்க மறுத்துவந்தன. சிலமாநிலங்களில் அதற்கான ஆணைபிறப்பிக்கப்பட்ட போது நாகராஜ் வழக்கின் தீர்ப்பைக்காட்டி பதவிஉயர்வில் இடஒதுக்கீடுசெல்லாது என உயர்நீதிமன்றங்கள் கூறியிருந்தன. அந்தக் குழப்பங்களையெல்லாம் தீர்ப்பதற்கு 2019 ஆம்ஆண்டுத் தீர்ப்பு வழிவகுத்தது. 

தற்போதைய தீர்ப்பால் எழுந்துள்ள குழப்பம்

2019 ஆம்ஆண்டு நீதிபதிஒய். சந்திரசூட்அமர்வு வழங்கியதீர்ப்புஇடஒதுக்கீட்டைநடைமுறைப்படுத்துவதற்குஏதுவானஒருதீர்ப்பாகும். ஆனால் இப்போதுவழங்கப்பட்டுள்ள தீர்ப்போஇடஒதுக்கீட்டைஒழித்துக்கட்டுவதற்கானதீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பை காரணமாகக்காட்டி எந்தவொரு மாநிலஅரசும் இடஒதுக்கீடு வழங்க மறுக்கலாம். ஏற்கனவே இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கு வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் பாஜகவுக்கு இந்தத் தீர்ப்பு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது. இடஒதுக்கீடு கொடு என்றாலே கொடுக்காதவர்கள் இப்போது இடஒதுக்கீடு கொடுப்பது கட்டாயமில்லை என்றால் எப்படிகொடுப்பார்கள்?

நீதிபதிகள்நாகேஸ்வரராவ் ,ஹேமந்த்குப்தா அமர்வு வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பால் எஸ்சி எஸ்டி இடஒதுக்கீடு மட்டுமல்ல பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) இடஒதுக்கீடும் கேள்விக்குறி ஆகியுள்ளது. ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டு உரிமையும் இந்தத் தீர்ப்பால் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த சட்டசிக்கலைத் தீர்ப்பதற்கு மத்தியஅரசு உடனடியாக இந்ததீர்ப்பை எதிர்த்து சீராய்வுமனு தாக்கல் செய்வதோடு இந்தத் தீர்ப்பை நிறுத்திவைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பி.கே.பவித்ரா வழக்கில் அரசு சார்பில் வாதிட்ட தலைமை வழக்கறிஞர் பதவிஉயர்வில் இடஒதுக்கீட்டின் அளவைக் கணக்கிடும்போது மக்கள்தொகையில் எஸ்சி/ எஸ்டி பிரிவினர் எவ்வளவு இருக்கிறார்களோ அதற்கேற்ப அதை நிர்ணயிக்கவேண்டும் என வாதிட்டார். அதை கவனத்தில் கொண்டு பதவிஉயர்வில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவும், இடஒதுக்கீடு தொடர்பான சட்டங்களில் நீதிமன்றம் தலையிடாமல் இருக்க அவற்றை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கவும் மத்தியஅரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான அரசியல் அழுத்தத்தைத் தரவேண்டியது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடமையாகும்.