ஆண்டாளின் காலம்: கவிஞர் வைரமுத்துவின் குழப்பம் - ரவிக்குமார்

Views : 123

பதிவு செய்த நாள் 18-Feb-2020



சாமிக்கண்ணுப் பிள்ளை எழுதியதை ஆதாரமாகக் காட்டி ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்கிறார் கவிஞர் வைரமுத்து. ஆனால் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதியோ Vaisnavisam in Tamil Literature , IITS, 2002 என்ற தனது நூலில் மா.ராசமாணிக்கனாரை மேற்கோள்காட்டி ஆண்டாள் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்.  

‘ சின்னமனூர் செப்பேட்டில் சீவலப்பன் என்ற பெயர் காணப்படுகிறது. சித்தன்னவாசல் கல்வெட்டு ஒன்றில் ‘சீர்கெழு செங்கோல் சீவலப்பன் ‘ என உள்ளது. பெரியாழ்வார் அந்த சீவலப்பனின் காலத்தைச் சேர்ந்தவர். திருப்பாவையில் வரும் வானியல் குறிப்புகளினடிப்படையில் அது கிபி 885 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகத் தெரிகிறது. எனவே ஆண்டாளும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்தான் என ராசமாணிக்கனார் கூறியுள்ளதை இ.பா தனது நூலில் வழிமொழிந்துள்ளார். 

The Secret Garland, Oxford Univ Press, 2010 என்ற ஆய்வு நூலின் ஆசிரியர் அர்ச்சனா வெங்கடேசனும் ஒன்பதாம் நூற்றாண்டு என்றே குறிப்பிட்டுள்ளார்.