பரிக்கல் ரயில்வே மேம்பாலம் - ரவிக்குமார் எம்பிக்கு அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்

Views : 100

பதிவு செய்த நாள் 20-Feb-2020

பரிக்கலில் ரயில்வே கேட் அகற்றப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது. அதனால் விவசாயிகளும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவே அங்கு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அதை விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ரயில்வேஅதிகாரிகளுக்குத் தெரிவித்தார். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்தார். அதனால் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு மேம்பாலம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அதற்காக பரிக்கல் பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு வந்து ரவிக்குமாருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். திமுக ஒன்றியச் செயலாளர்கள் திரு.ராஜவேலு,திரு.வைத்தியநாதன், திரு.முருகன் ஆகியோர் தலைமையில் அபிமன்யூ,அம்மாசி,முருகானந்தம், ஜெகதீசன்,ஆறுமுகம்,விஜயகுமார், கவியரசு,கோதண்டபாணி, மணிகண்டன் ஆகியோர் வந்திருந்தனர்.