எங்கள் நாடாளுமன்றப் பணிகளை மதிப்பிடுங்கள்

Views : 319

பதிவு செய்த நாள் 19-Mar-2020

எங்கள் பணிகளை மதிப்பிடுங்கள்


இந்து தமிழ் நாளேட்டுக்கு ஒரு வேண்டுகோள் ! 


கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த நான்கு எழுத்தாளர்களைப்பற்றி இதே நாளில் (19.03.2019) நடுப்பக்கக் கட்டுரை வெளியிட்டு ஊக்குவித்தது இந்து தமிழ் நாளேடு.


மக்கள் அளித்த ஆதரவால் நான்கு பேரும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்று ஓராண்டு நிறைவடையப்போகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களாக, எழுத்தாளர்களாக நாங்கள் ஆற்றியுள்ள பணிகளை மதிப்பீடு செய்ய வேண்டிய தருணம் இது. 


இந்த கட்டுரையை எழுதிய திரு செல்வ புவியரசன் அவர்களே அப்படியொரு மதிப்பீட்டைச் செய்தால் நல்லது. 


நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய வினாக்கள், சமர்ப்பித்த மனுக்கள் ஆற்றிய உரைகள்; தொகுதியில் செய்துவரும் பணிகள் முதலானவற்றைத் தொகுத்துக் கொள்வதற்காக www.writerravikumar.com என்ற இணையதளத்தைத் துவக்கியிருக்கிறேன். முகநூலிலும் ஓரளவு அவற்றைப் பதிவு செய்திருக்கிறேன். 


எனது ஓராண்டு பணிகளை ஒரு நூலாகவும் தொகுக்கவிருக்கிறேன். 2020 ஜூன் மாதத்தில் அது வெளியாகும்.