வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி மறியல்- கைது

Views : 284

பதிவு செய்த நாள் 09-Dec-2020


மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி இன்று புதுச்சேரியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்றேன். மறியலில் ஈடுபட்டவர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளோம்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் மேனாள் அமைச்சருமான தோழர் ஆர்.விஸ்வநாதன், மாநில செயலாளர் தோழர் சலீம், சிபிஐ எம் தலைவர்கள் முருகன், பெருமாள்; சிபிஐ எம் எல் தலைவர் சோ. பாலசுப்பிரமணியன்; மதிமுகவின் காப்ரியேல்; விசிக சார்பில் பொழிலன், அமுதவன், அகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தோழர்கள் இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்.

- ரவிக்குமார் எம்.பி