‘நேஷனல் ஒவர்சீஸ் ஸ்காலர்ஷிப்’ எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது? சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வீரேந்திர குமார் பதில்!

Views : 403

பதிவு செய்த நாள் 27-Jul-2021

அயல்நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் சென்று உயர்கல்விப் பெறுவதற்கான ‘நேஷனல் ஒவர்சீஸ் ஸ்காலர்ஷிப்’ கேட்டு 2020-21 இல் 596 எஸ்சி மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 90 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டது

ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வீரேந்திர குமார் பதில்

இன்று(27.07.2021) நாடாளுமன்றத்தில் பின்வரும் வினாக்களை ரவிக்குமார் எழுப்பியிருந்தார்:

* கடந்த ஐந்து ஆண்டுகளில் நேஷனல் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது? அதன் ஆண்டு வாரியான விவரங்களைத் தருக

* கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை பேர் விண்ணப்பித்தனர்? அதன் விவரங்களைத் தருக

* இதில் 30% மாணவிகளுக்கு வழங்கப்படுகிறதா? அதன் விவரங்களைத் தருக

* ஓபிசி பிரிவினருக்கும் இதேபோல ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் திட்டம் இருக்கிறதா? என்ற விவரங்களைத் தருக ஆகிய கேள்விகளை எழுப்பினார்

இந்த ஸ்காலர்ஷிப்பின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 500 ஆக உயர்த்த இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கேள்விகளுக்கு (starred question) அமைச்சர் அளித்துள்ள பதில்

‘நேஷனல் ஒவர்சீஸ் ஸ்காலர்ஷிப்’ கேட்டு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 எஸ்சி மாணவர்கள் விண்ணப்பிததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21 இல் 596 எஸ்சி மாணவர்கள் விண்ணப்பித்தனர் எனவும் அதில் 90 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டது எனவும் தெரிய வந்துள்ளது.

2016-17 இல் 535; 2017-18 இல் 487; 2018-19 இல் 379; 2019-20 இல் 461; 2020-21 இல் 596 எஸ்சி மாணவர்கள் இந்த ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதில் 2016-17 இல் 108 பேருக்கும், 2017-18 இல் 178 பேருக்கும், 2018-19 மற்றும் 19-20 ஆகிய வருடங்களில் தலா 97 எஸ்சி மாணவர்களுக்கும் 2020-21 இல் 90 பேருக்கும் இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக பட்ஜெட்டில் மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 20 கோடி மட்டுமே இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது . அதுவும் கூட முழுமையாக செலவிடப்படுவதில்லை. 2017- 18 , 2018-19 ஆகிய ஆண்டுகளில் தலா 3.13 கோடி, 5.97 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது.
எஸ்சி மாணவர்கள் கல்விபெறுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு மோடி அரசு போடும் தடைகளைக் கண்டிக்க  காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும்.