“இந்தியாவில் ‘க்ளினிக்கல் ட் ரயல்ஸ்’ எண்ணிக்கை அதிகரிப்பது ஏன்? “

Views : 126

பதிவு செய்த நாள் 05-Aug-2022

“இந்தியாவில் ‘க்ளினிக்கல் ட் ரயல்ஸ்’ எண்ணிக்கை அதிகரிப்பது ஏன்? “

ரவிக்குமார் எம்.பி ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்

2016-2021 க்கு இடையில் இந்தியாவில் செய்யப்பட்ட கிளினிக்கல் ட்ரயல்ஸ்களின் எண்ணிக்கை கற்பனை செய்ய முடியாத அளவு அதிகரித்துள்ளது. CTRI இன் தரவுகளின்படி 2011 மற்றும் 2020 க்கு இடையில், 28,196 சோதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - 2020 இல் மட்டும் 7,467 சோதனைகள் நடந்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில், கிளினிக்கல் ட் ரயல்ஸ் காரணமாக 311 பங்கேற்பாளர்கள் இறந்துள்ளனர், 22,176 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு ஆபத்தான பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவு. இதனால் பல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் க்ளினிக்கல் ட்ரயல்ஸை மேற்கொள்வதற்கு இந்தியாவைத் தேர்வு செய்கின்றன. இந்த விவகாரம் அவசரமாக விவாதிக்கப்பட வேண்டும்”

என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கிளினிக்கல் ட்ரயல்ஸ்’ நடத்துவதற்கான விதிகளை பாஜக அரசு 2019 இல் திருத்தியது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏராளமான சோதனைகள் இந்தியாவில் நடந்திருப்பதைப் பார்க்கும்போது அதற்கெனவே விதிகள் திருத்தப்பட்டனவா என்ற ஐயம் எழுகிறது. இந்தியர்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்துவதற்கு ஒன்றிய அரசாங்கமே ஊக்குவிக்கிறதா? இதில் உயிரிழப்பவத்களுக்கு சராசரியாக 8 லட்சம் ரூபாய் அளவுக்குத்த்தான் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதை உயர்த்துவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.