சீன ராணுவம் நமது எல்லைக்குள் குவிக்கப்பட்டிருக்கும் விவகாரம்: ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு ‘ ராணுவ ரகசியம்’ என ஒன்றிய அரசு பதில்

Views : 25

பதிவு செய்த நாள் 21-Dec-2022

சீன ராணுவம் நமது எல்லைக்குள் குவிக்கப்பட்டிருக்கும் விவகாரம்: ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு ‘ ராணுவ ரகசியம்’ என ஒன்றிய அரசு பதில்

“ டோக்லாமில் ஜம்பேரி மேடு வரையிலான சீனப் படைகளின் குவிப்பு இந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததும் வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவாயிலாக உள்ளதுமான சிலிகுரி வழித்தடத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நமது எல்லையைக் காக்க நமது அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?”

என்ற கேள்வியைக் குறுகியகால வினாவாக எழுப்பியிருந்தேன். அதற்கு எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் எழுத்துபூர்வமான பதிலில் :

“ பாதுகாப்பு அமைச்சகம் அவர்களின் பதிலில், ‘இந்தத் தகவல் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த விஷயம் ரகசியம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.”

எனக் கூறப்பட்டிருக்கிறது. சீன ராணுவம் நமது நாட்டுக்குள் நுழைந்து நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதோடு பல்லாயிரக் கணக்கான துருப்புகளையும் நிலைநிறுத்தி வைத்திருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த உண்மை நிலையை இந்திய ஒன்றிய அரசு தெரிவிக்க மறுப்பது அந்தச் செய்திகளை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது.