கொரொனா : மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Views : 247

பதிவு செய்த நாள் 19-Mar-2020

கொரொனா: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு 


சர்வதேச விமானம் எதுவும் மார்ச் 22 ஆம் தேதிவரை இந்தியாவுக்குள் வர அனுமதியில்லை. 


மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், மருத்துவ துறை சார்ந்தவர்களைத்தவிர 65 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வீட்டிலேயே இருக்கவேண்டும். 


10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது


அனைத்து தனியார் துறை ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலைசெய்யுமாறு அந்த நிறுவனங்களை மாநில அரசுகள் அறிவுறுத்தவேண்டும் 


கூட்டத்தை குறைக்கும் விதமாக மத்திய அரசின் பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள் வாரம் விட்டு வாரம் ( alternate week) அதுவும் நெகிழ்வான நேரத்துக்கு (staggered time) மட்டும் அலுவலகத்துக்கு வரலாம்.