மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம்

Views : 17

பதிவு செய்த நாள் 21-Jul-2021

கேள்வி:

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் 2021-22 ஆம் ஆண்டில் எத்தனை மனித நாட்கள் உருவாக்கப்படவிருக்கின்றன?

இதற்கு முந்தைய காலகட்டத்தில் (2020-21 ஆம் ஆண்டு) மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் மாநிலங்கள் வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது அதன் விவரம்?

இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தவேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அரசாங்கத்தின்மூலம் வழிமுறைகளை வழங்கப்பட்டதா?

அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதில்:

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டமானது கிராமப்புற பகுதியில் வாழக்கூடிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கபட்ட ஒரு திட்டமாகும். இத்திட்டத்தில் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 100 நாட்களாவது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு வேலை வழங்க வேண்டும்.

இதுவரை இந்தத் திட்டத்தில் எவ்வளவு மனித நாட்கள் வழங்க வேண்டும் என்ற இலக்கு இந்த நிதி ஆண்டில் உருவாக்கப்படவில்லை. அதன்படி 2021-22 ஆண்டில் 278.32 மனித நாட்கள் உள்ளது. ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மனித நாட்களின் ஒதுக்கீடு மற்றும் தேவை பொருத்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்த 2021-22 நிதி ஆண்டில் (16.07.2021) மொத்தமாக 120.49 கோடி செலவில் மனித நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக இந்த திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளவை பின்வருமாறு

1. அதன்படி ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி ஒதுக்கப்பட்டதன் விவரங்கள்:

(படத்தில் உள்ளது)
2. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தைச் செயல்படுத்தும் முழுப்பொறுப்பும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையே சாறும். இந்தத் திட்டத்தை விரிவான முறையில் அமைச்சகம் கண்காணித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் முக்கியக் கூறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

• மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து செயல்படுத்துவதை அமைச்சகம், இடைக்கால மதிப்புரைகள், தொழிலாளர் வரவு செலவு சந்திப்பு, தொழிலாளர் வரவு செலவு திருத்தச் சந்திப்பு, நிகழ்ச்சி மதிப்புரை சந்திப்பு, ஆகியவற்றின்மூலம் செயல்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் மத்திய, மாநில வேலைவாய்ப்பு உறுதி திட்ட கவுன்சில் இத்திட்டத்தைக் கண்காணித்துவருகிறது.

• மேலும் தேசிய அளவில் கண்காணித்தல், மத்திய, மாநில அதிகாரிகளுக்கு பொது திட்ட மதிப்புரைகள் செய்தல், மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நேரடி கள ஆய்வு செல்லுதல்.

• மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நிலையான தணிக்கை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தன்னிச்சையாக சமூக தணிக்கை செய்துகொள்ள ஒப்புதல் அளித்தல், தொடர்ந்து தணிக்கை விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது

• அனைத்து புகார்கள் மற்றும் குறைகள் அமைச்சகமானது சம்மந்தப்பட்ட மாநில/யூனியன் – க்கு அளிப்பதோடு சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கவும் வழிசெய்திருக்கிறது

• முறையான திட்டமிடல் மற்றும் வெளிப்படையான முறையில் நேரடி பரிமாற்றம், தேசிய மின்னணு நிதி அமைப்பு, ஆதார் பண பரிமாற்றம், மென்பொருள் மதிப்பீடு வேலைவாய்ப்பு அமைப்பு ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

என்று பதிலளித்துள்ளார்.