தமிழ்நாட்டில் மருத்துவ உபகரணங்களை ‘கேலிப்ரேட்’ செய்யாததால் பறிபோன உயிர்கள் எத்தனை? கமிஷன் அமைத்து விசாரிக்கவேண்டும் என ரவிக்குமார் எம்பி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்.

Views : 649

பதிவு செய்த நாள் 06-Feb-2020

இன்று (06.02.2020) ஸீரோ அவரின்போது விழுப்புரம் எம்பி ரவிக்குமார் பேசியதன் விவரம்: 

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே! 

நமது நாட்டிலே கோரனோ வைரஸ் பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி நாம் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் மருத்துவத் துறையிலே இருக்கிற நிர்வாகப் பிரச்சினை ஒன்று இந்த வைரஸ் தாக்குதலால் நேரிடும் இழப்புகளை விடக் கூடுதலான உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள centre for calibration and testing medical equipments என்ற அமைப்பு அதிர்ச்சி அளிக்கும் 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அதிலே தமிழ்நாட்டிலே 750 மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர், டயாலிசிஸ் மெஷின்கள் உள்ளிட்ட 12,000 மருத்துவ உபகரணங்களை சோதித்துப் பார்த்தபோது அவையெல்லாம் முறையாக கேலிப்ரேட் செய்யப்படவில்லை என்ற உண்மையை அது வெளிப்படுத்தியிருக்கிறது. இப்படி கேலிப்ரேட் செய்யப்படாததால் ஏராளமான உயிர்கள் பறிபோயுள்ளன. 

இப்போது 23 வகையான மருத்துவ உபகரணங்களை மட்டுமே முறையாக மேற்பார்வை செய்வதற்கு நமது அரசு உத்தரவிட்டு இருக்கிறது. ஆனால் மற்ற உபகரணங்கள் அப்படி முறையாக மேற்பார்வை செய்யப்படுவதில்லை. நிதி ஆயோக் நிறுவனம் இதற்காகத் தனியே அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து அது நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  

உடனடியாக நிதி ஆயோக்கின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இப்படி கேலிப்ரேட் செய்யப்படாததால் எத்தனை உயிர்கள் பறிபோய் இருக்கின்றன என்பதைக் கண்டறிவதற்காக ஒரு கமிஷனை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்!