மௌனம்

Views : 835

பதிவு செய்த நாள் 18-Feb-2020

தரையில் மோதி

சிதறுவதற்கு முன்பாக

உடலோடு மிதக்கும் மௌனம் 

முடிவு அறிவிக்கப்படுவதற்காகக்

காத்திருப்பவர்களின்

உள்ளங்கைகளுக்குள் பொத்திவைக்கப்பட்ட

மௌனம்

உறையிட்ட பூச்செண்டுக்குள்

கசகசக்கும்

மலர்களின் மௌனம்

பிரிந்து தன் வீடு ஏகும்

மகளைத்

தழுவி நிற்கும் தாயின் மௌனம்

கைவிடப்பட்ட தனிமையில்

இரவில் பயணிக்கும்

நிலவின் மௌனம்

இந்த வார்த்தைகளுக்குள்

கனக்கும் ஒரு

உயிரின் மௌனம்