துபையிலிருந்து திருச்சிக்கு

Views : 207

பதிவு செய்த நாள் 27-Jun-2022

துபையில் வசிக்கும் திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த தீபா என்பவரும் அவரது 3 வயது மகளும் ஊர் திரும்புவதற்காக டிக்கெட் கிடைக்காமல் தவித்தனர். திருச்சியிலிருந்து யாரோ ஒரு தோழர் என்னைத் தொடர்புகொண்டு இதைத் தெரிவித்தார். நான் அங்கிருக்கும் தூதரகத்துக்கும், இந்திய அயலுறவுத்துறை அமைச்சருக்கும், துபை தமிழ்ச்சங்க பொறுப்பாளருக்கும் கடிதம் எழுதினேன். அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு அடுத்துவரும் விமானத்தில் அனுப்பப்படுவதாகத் தமிழ்ச்சங்க பொறுப்பாளர் டாக்டர் ஜெயந்திமாலா சுரேஷ் எனக்குப் பின்வரும் மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்.

“ I have issued the tickets to them today and they are boarding the upcoming flight' 

நலமாக வந்துசேர வாழ்த்துகிறேன்