நாடாளுமன்றத்தில் ஓராண்டு

Views : 66

பதிவு செய்த நாள் 26-Jun-2025

நாடாளுமன்றத்தில் ஓராண்டு

====

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.து.ரவிக்குமார் அவர்கள் தலைவர் எழுச்சித் தமிழரின் வாழ்த்துகளோடு 2024-2025 இல் மேற்கொண்ட பணிகளில் சில:

நாடாளுமன்றப் பணிகள் -

பாராளுமன்றத்தில் 300 க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி 68 கேள்விகளுக்கு அமைச்சர்களிடம் இருந்து பதில் பெற்றார்.

தமிழகத்திற்கு காவிரி நீர் விடுவிப்பது தொடர்பாகவும், NEET மற்றும் UGC-NET தேர்வுகள் மறுதேர்வு நடத்தவும் உத்திரவாதம் பெற்று இருக்கிறார்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாதது ஏன் எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.

சீனாவின் ஆக்கிரமிப்பு, இராணுவத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பினார்.

ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான போஸ்ட் மெட் ரிக் உதவித்தொகைத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தினார்.

ரயில்வே துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி தொகுதிக்குட்பட்ட விழுப்புரம் சந்திப்பு, திண்டிவனம், திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல ரயில்வே நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற வழிசெய்தார்.

விழுப்புரம், வளவனூர் ஆகிய இடங்களில் ரயில்வே நிலங்களில் குடியிருந்துவரும் மக்களை வெளியேற்றக்கூடாது என அமைச்சரிடமும் அதிகாரிகளிடமும் வலியுறுத்தித் தடுத்து நிறுத்தியுள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுதளப் பகுதியில் ட்ரோன் தொழிற்சாலை அமைப்பதற்கு அந்த இடத்தை மாநில அரசுக்கு வழங்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார்.

கிழக்குக் கடற்கரை சாலை விரிவாக்கத்துக்கு அனுமந்தைக்குப் பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரியவர்களுக்கு நிதியை விடுவிக்குமாறு அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தி அதற்கு ஒப்புதல் பெற்றார்.

தமிழ்நாட்டின் நலன், ஒட்டுமொத்த மக்கள் நலன், தொகுதி வளர்ச்சி ஆகியவை குறித்துப் பாராளுமன்றத்தில் 11 முறை விவாதங்களில் கலந்து கொண்டு பேசி உள்ளார்.

முக்கியமான 2 சட்ட மசோதக்கள் மீதான விவாதங்களில் பங்கேற்று கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

ஒரு நாடு ஒரு தேர்தல் குறித்து விரிவான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளார்.

தலைவர் எழுச்சித் தமிழர் Thol.Thirumavalavan அவர்களும் இவரும் 16 ஆவது நிதி ஆணையத்தின் தலைவரை சந்தித்து தமிழ்நாட்டுக்குக் கூடுதல் நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

தொகுதியில் சுகாதாரம் தொடர்பான பணிகள்:

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 122 பேருக்கு புற்று நோய், இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை உள்ளிட்டவற்றுக்காக பிரதமர் நிவாரண நிதி மூலமாக சுமார் 8 கோடியே 27 லட்ச ரூபாய் உதவித்தொகை பெற்றுத் தந்துள்ளார்.

கருவாய்ப் புற்று நோய்த் தடுப்புக்கான தடுப்பூசித் திட்டம் இவரது முயற்சியால் தமிழ்நாட்டிலேயே விழுப்புரம் மாவட்டத்தில்தான் முன்னோடியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்து அவற்றின் மேம்பாட்டுப் பணிகளுக்கு வழிவகுத்துள்ளார்

முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 35 லட்ச ரூபாய் செலவில் காத்திருப்போர் கூடங்களைக் கட்டித் தந்துள்ளார்.

தொகுதியில் கல்வி தொடர்பான பணிகள்:

தொகுதியிலுள்ள 67 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைக் கருவிகள் வழங்கி உள்ளார்.

6 பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டுக் கருவிகளை வழங்கி உள்ளார்.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் படிப்பதற்காக மாவட்ட நூலகக் கட்டடம் அருகில் 50 லட்ச ரூபாய் செலவிலும், ஆட்சியர் அலுவலகம் அருகில் 9 லட்ச ரூபாய் செலவில் 4 வாசிப்பகங்களையும் கட்டித் தர நிதி வழங்கி உள்ளார்.

பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கு 17 லட்ச ரூபாய் வழங்கி உள்ளார்.

16 ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு அறிவியல் ஆய்வகங்களை அமைத்துத் தந்துள்ளார் .

பொதுவான வளர்ச்சிப் பணிகள் :

23 கிராமங்களுக்கு உயர்மின் கோபுர விளக்குகள் வழங்கி உள்ளார்.

6 கிராமங்களில் 62 லட்ச ரூபாய் செலவில் நியாய விலைக் கடைகளைக் கட்டித் தந்துள்ளார் .

6 கிராமங்களுக்கு 48 லட்ச ரூபாய் செலவில் நாடக மேடைகள் கட்டித் தந்துள்ளார்.

19 கிராமங்களில் 1 கோடியே 26 லட்ச ரூபாய் செலவில் கருமகாரிய கொட்டகைகளைக் கட்டித் தந்துள்ளார்.

3 கிராமங்களில் 20 லட்ச ரூபாய் செலவில் எரி கொட்டகைகளைக் கட்டித் தந்துள்ளார்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இரு தரப்பினருக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நியாய விலைக் கடை, கருமகாரிய கொட்டகை முதலானவற்றை அமைத்துத் தந்துள்ளார்.

மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் வலை பின்னும் கூடம், நியாயவிலைக் கடைகள், உயர் மின்கோபுர விளக்குகள், அங்கன்வாடிகள் என சுமார் 75 லட்ச ரூபாய் செலவில் அமைத்துத் தந்துள்ளார் .

விழுப்புரம் நகராட்சிக்குக் கூடுதல் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு 70 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார்.

மழை வெள்ள நிவாரணப் பணிகள்:

பெஞ்சால் புயல் மற்றும் கனமழையால் பாதிப்புக்கு உள்ளான விக்கிரவாண்டி, வானூர், விழுப்புரம், திண்டிவனம். திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 100 கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, எண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், போர்வைகள் , சேலைகள் முதலானவை அடங்கிய நிவாரணத் தொகுப்பை சொந்தப் பொறுப்பில் வழங்கினார்.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விழுப்புரம், திண்டிவனம், திருக்கோயிலூர், கோட்டக்குப்பம் ஆகிய நகராட்சிகளிலும்; விக்கிரவாண்டி, திருவெண்ணெய் நல்லூர், வானூர், மரக்காணம், வளவனூர், உளுந்தூர்பேட்டை, கண்டமங்கலம் உள்ளிட்ட பேரூராட்சிகளிலும் பணிபுரியும் அனைத்து துப்புரவுப் பணியாளர்களுக்கும் தலா 1000 ரூபாய் மதிப்புள்ள நிவாரணத் தொகுப்புகளை சொந்தப் பொறுப்பில் வழங்கியுள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்காமல் இருந்த விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை சுமார் 6 கோடி ரூபாயை முதலமைச்சர் அவர்களிடம் வேண்டுகோள் கடிதம் அளித்துப் பெற்றுத் தந்தார்.

மரக்காணம் பகுதியில் ஓடையத் தூர்வார கோரிக்கை விடுத்து நிதி ஒதுக்கச் செய்தார்.

மழை வெள்ளத்தில் தமது தந்தையை இழந்த இரண்டு பெண்களுக்கு அரசு வேலை பெற்றுத் தந்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் , மாண்புமிகு அமைச்சர்கள், அரசு செயலர்கள் முதலானோரிடம் வலியுறுத்தி மாநில அரசின் பல்வேறு திட்டங்களை தொகுதிக்குக் கொண்டுவந்துள்ளார்.