சிலப்பதிகாரத்துக்குக் கலைஞரின் பங்களிப்பு - ஒரு கலை வரலாற்றுப் பார்வை

Views : 21

பதிவு செய்த நாள் 27-Jun-2025

சாகித்ய அகாடமியும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தமிழ் மையமும் இணைந்து சென்னை கலைவாணர் அரங்கில் ஒருங்கிணைத்த முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இருநாள் கருத்தரங்கில் இன்று பங்கேற்று “ சிலப்பதிகாரத்துக்குக் கலைஞரின் பங்களிப்பு - ஒரு கலை வரலாற்றுப் பார்வை “ என்னும் தலைப்பில் உரையாற்றினேன்.  


On Modes of Visual Narration in Early Buddhist Art என்ற ஆய்வில் கலை வரலாற்றறிஞர் வித்யா தெஹேஜியா பௌத்த கலைகளின் எடுத்துரைப்புப் பற்றிக் கூறியிருப்பவற்றை , பூம்புகாரில் கலைஞர் உருவாக்கிய சிலப்பதிகாரக் கலைக்கூடத்தில் இருக்கும் புடைப்புச் சிற்பங்களுக்குப் பொருத்தி விளக்கினேன். 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். தமிழறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.