ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ரவிக்குமார் எம்.பி கடிதம் மூலம் வலியுறுத்தல்

Views : 37

பதிவு செய்த நாள் 31-Jul-2025

‘ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும்’ என்னும் 

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துக! 


ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ரவிக்குமார் எம்.பி கடிதம் மூலம் வலியுறுத்தல்  


===


சாதி, இனம, மதம், பாலினம் மற்றும் பாலியல் சார்பு ஆகியவற்றைக் கடந்து தனிநபர்களைப் பாதிக்கும் ஆணவக் குற்றங்கள் தொடர்பான பிரச்சினைமீது உங்கள் கவனத்தை ஈர்க்கவே இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். நீதித்துறை மற்றும் நிறுவன ரீதியான கவலைகள் மீண்டும் மீண்டும் எழுந்தாலும், இந்தியாவில் ஆணவக் குற்றங்களைத் தீர்ப்பதற்கான விரிவான சட்டவகைக் கட்டமைப்பு இன்னும் இல்லை.


தேசிய குற்ற ஆவண மையத்தின் (NCRB) தரவுகள் இந்தப் பிரச்சினையின் அளவைக் கணிசமாகக் குறைத்து மதிப்பிடுகின்றன. 2014 மற்றும் 2022 க்கு இடையில், NCRB 541 ஆணவக் கொலை வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. இது மாநிலங்கள் முழுவதும் நிகழ்ந்த இந்த வகைக் குற்றங்களைக் குறைத்து மதிப்பிடுதல், தவறான வகைப்படுத்தல், தரவு சேகரிப்பில் சீரான தன்மை இல்லாதது ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் என்று பரவலாகக் கருதப்படுகிறது. சுயேச்சையான ஆய்வுகளும் , மனித உரிமை அமைப்புகளும் உண்மையான நிகழ்வுகள் மிக அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளன. குறிப்பாக சாதிகளுக்கு இடையேயான, மதங்களுக்கு இடையேயான , ஒரே பாலின உறவு வைத்திருப்போருக்கு இடையேயான 


இந்திய சட்ட ஆணையம், அதன் அறிக்கை எண். 242 (2012) இல், கௌரவக் குற்றங்களைக் கையாள ஒரு தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. சக்தி வாஹினி எதிர் இந்திய ஒன்றியம் (2018) வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கியமான தீர்ப்பில், தடுப்பு, தீர்வு மற்றும் தண்டனை நடவடிக்கைகளை எடுக்க மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு உத்தரவிட்டது, மேலும் இதுபோன்ற குற்றங்களைச் சமாளிக்க குறிப்பிட்ட சட்டத்தின் அவசரத் தேவையை அதுவும் வழிமொழிந்தது .


இந்தச் சூழலில், பின்வரும் முக்கிய நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ளுமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன்:


1. ஆணவக் குற்றங்களை ஒரு தனித்துவமான மற்றும் தீவிரமான வன்முறை வடிவமாக அங்கீகரிக்க வேண்டும். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சுதந்திர உரிமைகளையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் பயங்கரவாதச் செயல்களை ஒத்த குற்றங்களின் கீழ் அவற்றை வகைப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.


2. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) போன்ற சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். இது கொலைகள், அச்சுறுத்தல்கள், சமூகப் புறக்கணிப்புகள், கட்டாய சிறைவாசம் மற்றும் துன்புறுத்தல் போன்ற அனைத்து வடிவங்களிலும் ஆணவக் குற்றங்களை நேரடியாகக் கையாளவேண்டும்.


3. வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் கொலை அல்லாத சம்பவங்கள் உட்பட கௌரவக் குற்றங்களுக்காக NCRB க்குள் ஒரு பிரத்யேக தேசிய தரவுத்தளத்தை நிறுவ வேண்டும்.


4. ஆணவக் குற்ற வழக்குகளில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற நடைமுறைகளை உறுதி செய்வதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்.


5. சட்ட அமலாக்க நிறுவனங்களின் பொறுப்பைக் கட்டாயப்படுத்துதல். கௌரவ அடிப்படையிலான வன்முறை தொடர்பான அச்சுறுத்தல்கள் அல்லது புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் காவல்துறையினர் மீது கடுமையான ஒழுங்கு மற்றும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


6. ஆபத்தில் உள்ள தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை உறுதி செய்தல் - இதில்

காவல்துறை பாதுகாப்பு, சட்ட உதவி, நிதி உதவி, எளிதில் அணுகக்கூடிய தங்குமிடங்கள் மற்றும் உளவியல் ஆதரவு ஆகியவை அடங்கும்.


7. கௌரவத்தின் பெயரில் வன்முறையை ஆதரிக்கும் அல்லது தூண்டும் சாதி பஞ்சாயத்து , காப் பஞ்சாயத்து அல்லது கட்ட பஞ்சாயத்து போன்ற நீதிக்குப்ப் புறம்பான அமைப்புகளை ஒழித்தல் அல்லது கண்டிப்பாக ஒழுங்குபடுத்துதல்


இந்த நடவடிக்கைகள் குடிமக்களின் கண்ணியம் மற்றும் அரசமைப்புச் சட்ட உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு மட்டுமல்லாமல், ஆணவக் குற்றங்களுக்கு ஜனநாயக மற்றும் பன்முகச் சமூகத்தில் இடமில்லை என்ற தெளிவான செய்தியை அனுப்புவதற்கு அவசியம்.


இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.