மரக்காணம் - புதுச்சேரி 4 வழி சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் - ரவிக்குமார் எம்பி கோரிக்கைக்கு வெற்றி

Views : 18

பதிவு செய்த நாள் 11-Aug-2025

மரக்காணம் - புதுச்சேரி 4 வழி சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்


எனது கோரிக்கைக்கு வெற்றி


ஒன்றிய அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்களுக்கு நன்றி


மரக்காணம் - புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை விரிவாக்கத் திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும். அதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீட்டை உடனே அரசு வழங்கவேண்டும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களிடம் கடந்த ஏப்ரல் மாதத்தில் கடிதம் அளித்து வலியுறுத்தினேன். இன்று அந்தத் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நிலம் கொடுத்தவர்களுக்குக் கூடிய விரைவில் இழப்பீடு வழங்கப்படும். இந்தத் தகவலை தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் எனக்குத் தெரிவித்தார். 


எனது கோரிக்கையை நிறைவேற்றித் தந்த அமைச்சர் நிதின் கட்கரி அவர்களுக்கு நன்றி 


இணைப்பு : நான் அளித்த கடிதம் மற்றும் அமைச்சரின் அறிவிப்பு