வாக்குரிமை பறிபோனால் வாழ்வுரிமையும் பறிபோகும்

Views : 18

பதிவு செய்த நாள் 02-Jan-2026

நண்பர்களே! புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறி முடித்துவிட்டோம். தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்துக் கொஞ்சம் அக்கறை கொள்வோம்! எஸ்.ஐ.ஆர் என்னும் வாக்குப் பறிப்புத் திட்டத்தை அலட்சியம் செய்தால் மிகப்பெரிய ஆபத்தில் தமிழ்நாடு சிக்கும்! 


“ பாசிஸ ஆட்சியாளர்கள் மக்களில் சில பிரிவுகளிடமிருந்து வாக்குரிமையைத் திட்டமிட்டுப் பறிப்பார்கள். சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட ஆதிக்கக் குழுவே சிறந்தது, மதிப்புடையது என்று ஆக்குவதற்காக, வாக்குரிமைப் பறிக்கப்பட்டவர்களை ‘அரை குடிமக்கள்’ என்ற நிலைக்குத் தள்ளுவார்கள்.” எனப் பாசிஸம் குறித்து ஆய்வு நூல்களை எழுதியுள்ள அறிஞர் ஜேஸன் ஸ்டான்லி கூறுவது இந்தியாவுக்கு அப்படியே பொருந்துகிறது. 


எஸ்.ஐ.ஆர் எப்படி வாக்குகளைப் பறிப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை திரு யோகேந்திர யாதவ் தனது கட்டுரைகள் மூலம் விளக்கி வருகிறார். இன்று தி இந்து ஆங்கில நாளேட்டில் எழுதப்பட்டிருக்கும் தலையங்கமும் முக்கியமானது. 


இந்தியாவில் பாராளுமன்ற சனநாயக முறை தொடரவேண்டும் என விரும்புகிற ஒவ்வொருவரும் எஸ்.ஐ.ஆர் குறித்து அக்கறை காட்டவேண்டும். மோடி அரசின் வாக்குரிமைப் பறிப்பு மோசடியைத் தடுக்க வேண்டும்!