காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினை: டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகியிருக்கும் தவறான செய்தி

Views : 11

பதிவு செய்த நாள் 02-Jan-2026

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு பிரவீன் சக்கரவர்த்தி குறித்து இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வெளியாகியுள்ள செய்தியில் எனது கருத்துக்களும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அதில் மேற்கோள் குறிக்குள் வெளியிடப்பட்டிருக்கும் “ "The INDIA bloc is the strongest in TN, and our chief minister (M K Stalin) is the key reason for the alliance remaining strong. There is an image being built that DMK alliance is in trouble, and Rahul should not allow it," என்ற கருத்தும்; “ Appreciating Rahul for his staunch opposition to BJP and RSS, Ravikumar said, "People like Praveen, instead of strengthening Rahul's fight against the RSS, are weakening him." என்ற கருத்தும் என்னுடையவை. அந்தச் செய்திக் கட்டுரையில் அதற்கு முன்பு “ VCK MP Ravikumar joined the chorus demanding action from Rahul Gandhi. “ என்று செய்தியாளர் சேர்த்திருப்பது எனது கருத்து அல்ல. 


திரு பிரவீன் சக்ரவர்த்தி மீது திரு ராகுல் காந்தி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? என செய்தியாளர் கேட்டபோது, “ அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்படிக் கேட்பது தவறு” என்றுதான் நான் அவரிடம் தெரிவித்தேன். ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது மூலம்தான் ஒரு தலைவர் உறுதியாக இருக்கிறார் என்று கருதுவது தவறு. அவர் கருத்தியல் நிலைப்பாட்டில் எப்படி சமரசம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என்பதை வைத்துத்தான் அவரது அரசியல் உறுதியை மதிப்பிட வேண்டும். அந்த விதத்தில் திரு ராகுல் காந்தி அவர்கள் இந்தியாவில் உள்ள தலைவர்களிலேயே மிகவும் அரசியல் உறுதிமிக்க ஒருவராவார். 


உறுதியான தலைவராக இருப்பதற்கும் அதிகாரத்துவ அணுகுமுறை கொண்ட ( authoritarian) தலைவராக இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது. ஒரு அமைப்பில் சனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த விதத்தில் திரு ராகுல் காந்தி அவர்கள் மிகுந்த ஜனநாயகம் கொண்ட தலைவர். ஆனால் அரசியல் உறுதிமிக்க தலைவர் இதை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்” என்று தான் அந்த செய்தியாளரிடம் நான் தெரிவித்தேன். ஆனால், நான் தெரிவித்த கருத்துக்கு நேர் மாறாக திரு பிரவீன் சக்ரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரசில் நானும் சேர்ந்து கொண்டிருப்பதாக அந்தச் செய்தி எழுதப்பட்டிருப்பது தவறானது. அது வருத்தம் அளிக்கிறது, அப்படி நான் கூறவில்லை. 


- ரவிக்குமார் எம்.பி




https://timesofindia.indiatimes.com/city/chennai/dmk-allies-upset-at-praveen-chakravarthys-actions-demand-rahul-to-initiate-action/amp_articleshow/126256294.cms