சாதிவாரிக் கணக்கெடுப்பு: நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்”

Views : 23

பதிவு செய்த நாள் 20-Jul-2026

“ சாதிவாரிக் கணக்கெடுப்பு: நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்” BAC கூட்டத்தில் வலியுறுத்தினேன். 


===

நேற்று (19.07.2026 ) மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை சபாநாயகர் திரு ஓன் பிர்லா தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ( BAC) #விசிக சார்பில் பங்கேற்றேன். மும்மொழிக்கொள்கை, மேகேதாது பிரச்சனைகளை விவாதிப்பதோடு எதிர்வரும் சாதிவாரிக் கணக்கெடுப்பில் சரிசெய்ய வேண்டிய பிரச்சினை ஒன்றையும் சுட்டிக்காட்டி அதுகுறித்து விவாதித்து வழிகாட்டுதல்களைத் தரவேண்டும் என வலியுறுத்தினேன். 


பல்வேறு மாநிலங்களிலும் உள்ள எஸ்சி; எஸ்டி பட்டியல்களில் இழிவான பொருள்தரும் சாதிப் பெயர்கள் உள்ளன. அவற்றைப் பொதுவெளியில் ஒருவர் சொன்னால் அவரைத் தண்டிக்கலாம் என நமது சட்டங்கள் கூறுகின்றன. ஆனால், அந்தப் பெயர்கள் சென்சஸ் ரெக்கார்டுகளிலும் அரசு ஆவணங்களிலும் தொடர்கின்றன. எனவே சென்சஸ் எடுக்கும்போது இந்த முரண்பாட்டைச் சரிசெய்யும் விதமாக அத்தகைய பெயர்களை நீக்கி கணக்கெடுப்புச் செய்ய வேண்டுமென்று அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் தர வேண்டும். இதற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.” என வலியுறுத்தினேன்.