நரிக்குறவர்களுக்கு நலவாரியம் உருவானது எப்படி ?

Views : 136

பதிவு செய்த நாள் 03-Nov-2021

நரிக்குறவர் சமூகப் பெண் அஸ்வினி கடந்த சில நாட்களாக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சமத்துவத்துக்கான அவரது சுயமரியாதைக் குரல் அறநிலையத்துறை அமைச்சரையே அன்னதானப் பந்துக்கு அழைத்து வந்துவிட்டது. தங்களை எம்பிசி பட்டியலிலிருந்து எஸ்டி பட்டியலில் சேர்க்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். 

2006-2011 இல் விசிகவின் சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என அப்போது வலியுறுத்தியதோடு அப்படி சேர்க்கப்படுவதற்கு முன்னால் அவர்களுக்கென நல வாரியம் ஒன்றை உருவாக்கித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன் ( உரையின் அப்பகுதியை இணைப்பில் பார்க்க) 

அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அந்த கோரிக்கையை ஏற்று அந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே நரிக்குறவர் நலவாரியம் அமைத்து அறிவித்தார். 28.03.2008 அன்று பட்ஜெட் மீது சட்டப்பேரவையில் உரையாற்றிய நான் அதற்காக நன்றி தெரிவித்தேன்( அந்த உரையின் பகுதியை இணைப்பில் காண்க) 

நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என 13 ஆண்டுகளுக்கு முன்பே விசிக சார்பில் வலியுறுத்தியதோடு, அவர்களுக்காக நலவாரியம் அமைக்கக் காரணமாக நான் இருந்தேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

- ரவிக்குமார்
நாடாளுமன்ற உறுப்பினர்