வெற்றிப் பயணம்

Views : 31

பதிவு செய்த நாள் 24-Jan-2020

எரியும் சிதைகளால்

ஒளியூட்டப்பட்ட ஓடுபாதையில்

இறங்குகிறது உங்கள்

விமானம்

பறந்து பறந்து

பறந்து பறந்து

சென்று

கற்று வருகிறீர்கள்

பறவைகளைப்

பறக்கமுடியாமல் செய்வது எப்படி

என்னும் வித்தையை

வரவேற்க

வரிசையில் காத்து நிற்கிறோம்

கொய்யப்பட்ட

எங்கள் தலைகளை

எங்கள் கைகளில்

ஏந்தியவாறு