பதினொன்றாம் கவிதை

Views : 166

பதிவு செய்த நாள் 24-Jan-2020

கண்மாயில்,

மின்விசிறியிலிருந்து தொங்கும் கயிற்றில்,

ரயில் தண்டவாளங்களுக்கு இடையில்,

இப்போது -

பட்டப்பகலில், நெரியும் ஜனத்திரளின்நடுவில்

செய்தி மதிப்பும் இல்லா மரணங்கள் எண்ணிக்கையாகவும் மாறாத உயிர்கள்

பெருக்கெடுத்த ரத்தம்

ஆவியாகிறது,

காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாய்

நிலைகொள்கிறது,

சுழன்று புயலாகிறது

சிலர் அதற்குப் பெயரிடுகிறார்கள்

வெண்மணி

கயர்லாஞ்சி

பரமக்குடி

உணா

எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்படுகின்றன

ஊரைப் புரட்டப்போகும்

புயலுக்காகக் காத்திருக்கிறது

புறத்தொண்டர் பெருங்கூட்டம்

அதிகார வெப்பத்தில்

வலுவிழந்து

மீண்டும்

இதயங்களுக்குத் திரும்புகிறது

புயல் சின்னம்

தள்ளிப்போகிறது

பருவமழை