செயற்கை அறிவாற்றல் (AI) தொழில்நுட்பம் எந்தெந்த துறைகளில் பயன்படுத்தப்படுகிறது?

Views : 533

பதிவு செய்த நாள் 18-Mar-2020

“ செயற்கை அறிவாற்றல் (AI) தொழில்நுட்பத்தால் 1,85,000 பேர் வரை வேலை பெற்றுள்ளனர்”


 ரவிக்குமார் எம்பி எழுப்பிய கேள்விக்கு அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுத்துப்பூர்வ பதில்


இது தொடர்பாக ரவிக்குமார் எழுப்பிய கேள்வியும் அதற்கு அமைச்சர் அளித்த பதிலும் பின்வருமாறு: 


வினா : 


“ செயற்கை அறிவாற்றல்( Artificial Intelligence) தொழில் நுட்பம் நமது நாட்டில் எந்தெந்தத் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது? தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள பணிகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்ற கேள்வியை ரவிக்குமார் எழுப்பியிருந்தார். 


அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அமைச்சர் ஹர்ஷ்வர்தன்,


“ செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பம் என்பது உலக அளவில் இப்போதுதான் ஆரம்ப நிலையில் உள்ளது. இந்தியாவிலும் அப்படித்தான். பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் இந்தத் தொழில்நுட்பத்திற்கு உள்ளது.


தற்போதைய நிலையில் இந்தியாவில் பின்வரும் துறைகளில் அந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது: 

வங்கிகள் மற்றும் வணிகத்துறை

தொழில்துறை

உற்பத்தித் துறை 

சுகாதாரத்துறை 

கல்வித்துறை


பொருளாதாரத்தின் அனைத்து விதமான துறைகளிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய இந்தத் தொழில்நுட்பம் இப்போதுதான் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது என்பதால் அதன் மூலம் எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதைத் துல்லியமாகக் கணிப்பது இயலாது. எனினும் 1,65,000 முதல் 1,85,000 பேர் வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை அறிவாற்றல் மற்றும் பிக்டேட்டா பிரிவுகளில் 2019 ஆம் ஆண்டு வரை வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்” 


என்று அமைச்சர் பதிலளித்தார்.