மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு

Views : 157

பதிவு செய்த நாள் 28-Jun-2022

மருத்துவப் படிப்பில் MBBS மற்றும் PG Medical Courses ஆகியவற்றில் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மருத்துவக் கல்வி வாய்ப்பை இழக்கின்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் MBBS இடங்கள் 490 அதில் 27% கணக்கிட்டால் 132 இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும். அதுபோலவே PG Medical Courses இல் தமிழ்நாட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய தொகுப்புக்கு 879 இடங்கள் அளிக்கப்படுகின்றன. அதில் 27% கணக்கிட்டால் 237 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்கவேண்டும். மத்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு அளிக்கப்படாததால் தமிழ்நாட்டில் மட்டும் 369 மாணவர்களின் வாய்ப்பு ஒவ்வொரு ஆண்டும் பறிக்கப்படுகிறது.

இந்த அநீதியைக் களையவேண்டும் , பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு மத்திய தொகுப்பு இடங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் எனக் கேட்டு இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தில் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களும் நானும் ( ரவிக்குமார் ) தனித்தனியே மனு அளித்தோம்.

இந்தப் பிரச்சனையை 27 ஆம் தேதியே ஜீரோ அவரில் எழுப்ப அனுமதி கேட்டேன், கிடைக்கவில்லை. இதை உடுக்குறியிட்ட வினாவாகவும் எழுப்பியிருக்கிறேன். 27 ஆம் தேதி அளிக்கப்பட்ட அந்த வினாவுக்கு 17 ஜூலையில் பதில் அளிக்கப்படலாம்