இந்தியில் சபாநாயகர் அனுப்பிய கடிதம்: ரவிக்குமார் எதிர்ப்பு

Views : 86

பதிவு செய்த நாள் 12-Jul-2022

இன்று மக்களவை சபாநாயகரிடமிருந்து உறுப்பினர்களுக்கு தனித்தனியே ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது. அது முழுவதும் இந்தியிலேயே உள்ளது. இந்தி தெரியாத உறுப்பினர்களுக்கு அதில் என்ன கூறப்பட்டிருக்கிறது எனத் தெரியவில்லை.

இது தொடர்பாக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை அளித்தார்.

“ தங்களிடமிருந்து வந்த கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை. ஏனெனில் அது இந்தியில் மட்டும் உள்ளது. இனி சபாநாயகர் அனுப்பும் கடிதத்தின் ஆங்கில வடிவத்தையும் உறுப்பினர்களுக்குத் தரவேண்டும் “

என அதில் ரவிக்குமார் கேட்டிருக்கிறார்.

படம்:


1. சபாநாயகரின் கடிதம்;


2.ரவிக்குமாரின் கடிதம்


கோரிக்கைக்கு வெற்றி

சபாநாயகர் காலையில் இந்தியில் அனுப்பிய கடிதத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் அக்கடிதம் மக்களவையில் ஆங்கிலத்திலும் இந்தியிலுமாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.


வெல்லும் தமிழ் !