செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநர் விரைவில் நியமனம்- ரவிக்குமார் எம்பி எழுப்பிய வினாவுக்கு மத்திய அரசு பதில்

Views : 95

பதிவு செய்த நாள் 10-Feb-2020

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குனர் உள்ளாரா? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக; நிரந்தர இயக்குநர் எப்போது நியமிக்கப்படுவார்? என்ற வினாக்களை ரவிக்குமார் எம்பி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார். அதில்,

“ நிரந்தர இயக்குநர் நியமிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு அதனுடைய பரிந்துரை பணி நியமனத்துக்கான கேபினட் குழுவுக்கு (ACC) அனுப்பப்பட்டு உள்ளது. பணி நியமனத்துக்கான கேபினட் குழுவின் ஒப்புதல் அளிக்கப்பட்டதும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநர் நியமிக்கப்படுவார்”

என்று தெரிவித்துள்ளார்.