ஆண்டிராய்ட் செயலி மூலம் அனுப்பப்பட்ட கோரிக்கைகளில் கல்வி நூலகம் தொடர்பானவற்றை நிறைவேற்றித் தருமாறு DRDA திட்ட இயக்குநருக்கு அனுப்பப்பட்ட கடிதம்:

Views : 493

பதிவு செய்த நாள் 13-Feb-2020

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பின்வரும் கோரிக்கைகள் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளிகள்

திருவெண்ணைநல்லூர் வட்டம் பள்ளிப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் பள்ளி கட்டிடம் மிகவும் சிதிலமடைந்துள்ளது. அதை சீரமைப்பு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

விக்கிரவாண்டி வட்டம் நூற்றாண்டு ஆரம்பப்பள்ளி மிகவும் சிதிலமடைந்துள்ளது அதை சீரமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

திருவெண்ணைநல்லூர் வட்டம் கந்திகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மிகவும் சிதிலமடைந்து உள்ளது. அதை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ராதாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடம் மிகவும் மோசமாக சிதிலமடைந்து உள்ளது அதை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

விக்கிரவாண்டி ஒன்றியம் அய்யன் கோவில் பட்டு உயர்நிலைப் பள்ளி சுற்றுச் சுவர் இல்லாமல் மாணவர்கள் அவதியுறுகின்றனர். அங்கு சுற்றுச்சுவர் கட்டித் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வானூர் வட்டம் நெமிலி ஆதிதிராவிட நலப் பள்ளி கட்டிடம் மிகவும் மோசமாக சிதிலமடைந்து உள்ளது அதைப் பழுது நீக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நூலகம்

உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தமங்கலத்தில் நூலகக் கட்டிடம் தேவை என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது

உளுந்தூர்பேட்டை வட்டம் பின்னல் வாடியில் நூலகக் கட்டிடம் வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது

விக்கிரவாண்டி கக்கன் காலனியில் நூலகம் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்

நன்றி

அன்புடன்

முனைவர் து.ரவிக்குமார்