பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து 42 லட்ச ரூபாய்- ரவிக்குமார் எம்பி கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

Views : 43

பதிவு செய்த நாள் 14-Feb-2020

பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து 42 லட்ச ரூபாய்- ரவிக்குமார் எம்பி கோரிக்கையை ஏற்று நடவடிக்கை விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த பல்வேறு நபர்களின்  புற்றுநோய் சிகிச்சைக்காகவும் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காகவும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்குமாறு 12.02.2020 வரை 21 பரிந்துரை கடிதங்களை விழுப்புரம் எம்பி ரவிக்குமார் அனுப்பியுள்ளார். அவற்றில் இதுவரை 15 பேருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து நிதி ஒதுக்கிக் கடிதம் வந்துள்ளது. 

6 பேருக்கு தலா 2.50 லட்ச ரூபாய் வீதமும் 9 பேருக்கு தலா 3 லட்ச ரூபாய் வீதமும் மொத்தம் 42 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையாக ஒதுக்கப்பட்டு ஆணை பெறப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிலேயே விழுப்புரம் தொகுதிக்குத்தான் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்காக 5 மாதங்களில் இவ்வளவு பேருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.