பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

Image Post
அகல் விளக்கு ஏற்றுவோம்! மண்பாண்டத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி வீசச் செய்வோம்!

பதிவு செய்த நாள் 01-Nov-2021

விழுப்புரம் மாவட்டத்தில் சாலைஅகரம், ராகவன்பேட்டை, அய்யூர்அகரம், அய்யங்கோவில்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் மண்பாண்டத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் தீபாவளி நேரத்தில் அகல்விளக்குத் தயாரித்து விற்பனை செய்வதைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அவர்கள் தயாரித்து விற்பதற்காக வைத்திருக்கும் அகல் விளக்குகளை சந்தைப்படுத்த முடியாத இக்கட்டான சூழ்நிலையில் தவிக்க...

Image Post
விழுப்புரம் மாவட்டத்தில் பெண் கல்வியை 75% ஆக உயர்த்துவோம்! - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 06-Sep-2021

தமிழ்நாடு அரசின் சார்பில் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மட்டுமன்றி விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுமே நல்லாசிரியர்கள் தான். ஏனென்றால் இங்கே ஆசிரியர் பணி செய்வது என்பது மிகவும் சவாலானது. தமிழ்நாட்டில் படிப்பறிவு குறைவாக உள்ள மாவட்டங்களில் முதன்மையானது விழுப்புரம். அதிலும் குறிப்பாக பெண் கல்வி என...

மழை வெள்ளத்துக்கு சிறுவன் பலி

பதிவு செய்த நாள் 09-Dec-2020

மழை வெள்ளத்துக்கு சிறுவன் பலி உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த மதன் என்ற 10 வயது சிறுவன் மழை வெள்ளம் தேங்கியிருந்த குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது தாயார் திருமதி ஜெயப்பிரியா அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினேன். திமுக ஒன்றிய செயலாளர்கள் திரு வைத்தியநாதன், திரு ராஜவேலு, மா. பொ. குழு உறுப்பினர் திரு ஜெயராமன், சம்ச...

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி மறியல்- கைது

பதிவு செய்த நாள் 09-Dec-2020

மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி இன்று புதுச்சேரியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்றேன். மறியலில் ஈடுபட்டவர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளோம். புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் மேனாள் அமைச்சருமான தோழர் ஆர்.விஸ்வநாதன், மாநில செயலாளர் தோழர் சலீம், சிபிஐ எம் தலைவர்கள் முருகன், பெருமாள்; சிபிஐ எம் எல் தலைவர...