ரவிக்குமார் எம்.பியின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டு மற்றும் படுக்கைகளை அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை

Views : 349

பதிவு செய்த நாள் 29-Jun-2022

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் 04.06.2021 அன்று கோரிக்கை கடிதம் அளித்து வலியுறுத்தியிருந்தார். அதனடிப்படையில் அதற்கான குறிப்புரையை அனுப்புமாறு மருத்துவக் கல்வி இயக்குனரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் பணித்துள்ளது. அந்த உத்தரவின் நகலை மக்கள் நல்வாழ்வுத்துறை இணைச் செயலாளர் ரவிக்குமார் எம்.பிக்கு அனுப்பியுள்ளார்.