தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா, 2019 இல் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அளித்த பரிந்துரைகள் மீது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வெள்ளை அறிக்கையை வெளியிடுக!

Views : 93

பதிவு செய்த நாள் 10-Aug-2022

தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா, 2019 இல் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அளித்த பரிந்துரைகள் மீது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வெள்ளை அறிக்கையை வெளியிடுக!

 - இன்று தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்குக் கடிதம் எழுதினேன்!

தகவல் பாதுகாப்பு மசோதா 2021ஐ ஒன்றிய அரசு திடீரென வாபஸ் பெற்றது தொடர்பாக ஒன்றிய ஐடி அமைச்சருக்கு இன்று ஒரு கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளேன். அதில் பின்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளேன்:

அ. ஒன்றிய அரசு இதற்கென முன்மொழிந்துள்ள விரிவான சட்டக் கட்டமைப்பின் கூறுகள் என்ன?

ஆ . விரிவான சட்டக் கட்டமைப்பில் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டங்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதா?

இ. தரவுப் பாதுகாப்பிற்கான சட்டமியற்றும் கட்டமைப்பைத் திருத்துவதற்கு அரசு பணிக்குழுக்களை உருவாக்கியுள்ளதா?

ஈ. தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா, 2019 இல் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அளித்த பரிந்துரைகள் மீது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வெள்ளை அறிக்கையை ஐடி அமைச்சகம் வெளியிடுமா?