“ முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாகத் தமிழ் மொழிக்கென மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும்”

Views : 275

பதிவு செய்த நாள் 10-Feb-2023

“ முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாகத் தமிழ் மொழிக்கென மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும்”

பட்ஜெட் மீதான எழுத்துபூர்வ உரையில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்

 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த எழுத்துபூர்வமான உரையில் இந்த பட்ஜெட் எப்படி பெரும்பான்மைவாதத்தின் பொருளாதார அறிக்கையாக இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளார்.

“ இந்த பட்ஜெட்டில் சிறுபான்மை சமூகத்தினருக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாகுபாடுகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் ; அவர்களுக்கு நியாயமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

* எனது விழுப்புரம் தொகுதியில் உள்ள ரயில்வே பள்ளியை கேந்திரிய வித்யாலயா பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

* ஏகலவ்யா மாதிரி பள்ளிகள் போன்று எஸ்சி பிரிவினருக்கு சிறப்புப் பள்ளிகள் அமைக்க வேண்டும்.

* எஸ்சிஎஸ்பி மற்றும் டிஎஸ்பியை முறையாக செயல்படுத்த மத்திய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

 * மத்திய அரசு சமஸ்கிருத மொழிக்காக நான்கு பல்கலைக்கழகங்களை நிறுவியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி மறைந்த தமிழக முதலமைச்சரும், சிறந்த தமிழறிஞருமான திரு.மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஆரம்பமாகிறது. அவரை கவுரவிக்கும் வகையில், தமிழகத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனவும் வலியுறுத்தியுள்ளார்.