“உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்தில் மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதை அரசு உறுதிசெய்யும்”

Views : 18

பதிவு செய்த நாள் 24-Mar-2023

“உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்தில் மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதை அரசு உறுதிசெய்யும்”

இன்று நான் நாடாளுமன்றத்தில் எழுப்பிய வினாவுக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரெண் ரிஜிஜு பதில்

சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாகத் தமிழைப் பயன்படுத்தவும்; உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மாநிலங்களுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யவும் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய வினாவுக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் அளித்த பதில்:

தமிழக அரசின் கோரிக்கையின் அடிப்படையில், இது தொடர்பான முந்தைய முடிவுகளை மறுஆய்வு செய்து, இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைத் தெரிவிக்குமாறு, இந்திய தலைமை நீதிபதியிடம் அரசு கோரிக்கை விடுத்தது. இந்திய தலைமை நீதிபதி, முழு நீதிமன்றம், விரிவான விவாதங்களுக்குப் பிறகு, முந்தைய முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்து, மாண்புமிகு நீதிமன்றத்தின் முந்தைய முடிவுகளை மீண்டும் வலியுறுத்தியது.”

“ உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் இந்திய அரசியலமைப்பின் 124 வது பிரிவின் கீழ் செய்யப்படுகிறது, இதில் எந்தவொரு சாதி அல்லது நபர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் ஏற்பாடு இல்லை. எவ்வாறாயினும், உச்ச நீதிமன்ற கொலீஜியத்துடன் கலந்தாத்து, உச்ச நீதிமன்றத்தின் பெஞ்சில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது.”