நகைக்கடை உரிமையாளர்களால் வாங்கப்படும் சேதாரம் செய்கூலி சரியானதுதானா? ரவிக்குமார் எம்.பி நாடாளுமன்றத்தில் கேள்வி

Views : 14

பதிவு செய்த நாள் 05-Dec-2023

நகைக்கடை உரிமையாளர்களால் வாங்கப்படும் சேதாரம் செய்கூலி சரியானதுதானா?  

ரவிக்குமார் எம்.பி நாடாளுமன்றத்தில் கேள்வி 

நகைக் கடைகளில் நுகர்வோரிடம் வாங்கப்படும் சேதாரம், செய்கூலி ஆகியவை உண்மைக்கு மாறாகத் தெரிவிக்கப்படுவது அரசுக்குத் தெரியுமா? 

நகை செய்யும்போது ஏற்படுவதாக நகைக் கடை உரிமையாளர்கள் சொல்வது உண்மையான சேதாரம்தானா? அவர்கள் நகைத் தொழிலாளர்களுக்குத் தந்ததாகச் சொல்லி மக்களிடம் வசூலிக்கும் செய்கூலி என்பது உண்மையாக அவர்கள் கொடுத்த கூலியா? இதில் உள்ள முரண்பாடுகளைக் களைய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். 

“ அத்தகைய புகார் எதுவும் அரசுக்கு வரவில்லை; எடைபோடும் எந்திரங்கள் மாநில அரசுகளின் Legal Metrology துறையைச் சேர்ந்த அதிகாரிகளால் ஒவ்வொரு ஆண்டும் பரிசோதிக்கப்படுகின்றன “ என மாண்புமிகு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதாரி தெரிவித்துள்ளார்.