• slide-17
  • slide-17
  • slide-17
  • slide-17
  • slide-17
  • slide-17

வீடியோ

தொகுப்பு

முனைவர் ரவிக்குமார்

                    நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு ’தமிழில் தொழிற்பட்ட மூன்று இலக்கிய இயக்கப் போக்குகளாக எழுத்து இலக்கியப் போக்கு, வானம்பாடி இலக்கியப் போக்கு, நிறப்பிரிகை இலக்கியப்போக்கு ஆகியவற்றை விமர்சகர்கள் சுட்டுவர்.

                    அவற்றுள் நிறப்பிரிகை இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்ததோடு அந்த இதழைப் பதிப்பித்து வெளியிட்டவர் ரவிக்குமார். அந்த இதழ் ஒரு இயக்கமாக அறியப்படுவதற்கான களப் பணிகளை முன்னெடுத்தவர்...

மேலும் படிக்க

உரைகள்

தொகுப்பு

கேலரி

தொகுப்பு

கட்டுரைகள்

தொகுப்பு

content_img_2

டெல்லி நாட்குறிப்பு - 2

பதிவு செய்த நாள் 20-Jul-2022

                                                  இலங்கை சிக்கலில் இந்தியா செய்யவேண்டியவைபுதிதாக விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரிகளுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருக்கும் காந்தி சிலையின் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தை நடத்தின. திரு ராகுல் காந்தி தலைமையில் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிறு அளவில் விலை உயர்ந்த பட்டாலும் மிகப்பெரிய போராட்டங்கள் வெடிக்கும். இப்போது மக்கள் இதற்கெல்லாம் பழகி விட்டார்களா அல்லது தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகத் தகுந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களா என்பது புரியவில்லை. அவை கூடிய பிறகும்கூட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்று எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சபாநாயகர் அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தொடர்ந்து அலுவல்களை நடத்திக் கொண்டிருந்தார். கேள்வி நேரம் முழுமையாக இன்று நடைபெற்றது. எஃகுத்துறை அமைச்சர் சிந்தியா அவர்களைப் பார்ப்பதற்கு 11 மணிக்கு நேரம் பெற்றிருந்தோம். சேலம் உருக்காலையில் இருந்து தொழிலாளர் விடுதலை முன்னணியின் செயலாளர் ரவிச்சந்திரனும் ஐஎன்யுசியின் செயலாளர...


content_img_3

டெல்லி நாட்குறிப்பு - 1

பதிவு செய்த நாள் 19-Jul-2022

                                                  டெல்லி டிராபிக்கில் தேங்காய் பத்தைநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாள். குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் 11 மணிக்கு சற்று முன்பாகவே தலைவரும் நானும் நாடாளுமன்றத்திற்குச் சென்று விட்டோம். முதலில் வாக்களித்து விட்டு அதன் பிறகு அவைக்குள் செல்லலாம் என்று நினைத்து வாக்களிப்பதற்காகப் போனோம். ஆனால் அங்கே கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று சொன்னதால் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றுவிட்டுப் பிற்பகலில் சென்று வாக்களிக்கலாம் எனத் திரும்பினோம்.இன்று உடுக்குறியிட்ட வினா ஒன்று தலைவருக்கு வந்திருந்தது. கிரிப்டோகரன்சி பற்றிய அந்த வினாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பதில் அளிப்பதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் இன்று ஸீரோ அவரில் பேசுவதற்கும் தலைவருக்கு அனுமதி கிடைத்திருந்தது. கிரிப்டோ கரன்சி தொடர்பாக அவர் எழுப்பியிருந்த வினாவுக்கு நிதி அமைச்சர் அளித்திருந்த பதிலை வாங்கி அதைப்படித்து இருவரும் விவாதித்துக்கொண்டோம். அந்த வினா தொடர்பாக துணைக் கேள்வி ஒன்றுக்கு அனுமதி கோரி சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை எழுதித் தயாராக வைத்துக் கொண்டேன். அந்த நேரத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி அவ...நூல்கள்

தொகுப்பு